Homeஉள்நாட்டு செய்திநாட்டில் கருத்தடை மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு

நாட்டில் கருத்தடை மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு

spot_img

நாட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கருத்தடை மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்தடை மாத்திரைகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்குள், குறித்த மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக புதிய மருந்துத் தொகுதிகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததே தற்போதைய தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச மற்றும் தனியார் துறைகளின் ஊடாக விநியோகிக்கப்படும் கருத்தடை மாத்திரைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், நாட்டிலுள்ள பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, விலை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையே இந்த நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாடிய பின்னர், பங்களாதேஷிலிருந்து குறித்த கருத்தடை மாத்திரைகளை இறக்குமதி செய்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ‘மிதுரி’ (Mithuri) கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்ட அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய ஏனைய மருந்து வகைகளையும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

2026ஆம் ஆண்டில் அரச சேவைக்கு 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம்...

இலங்கையில் A H1N1 தொற்று அதிகரிப்பு

இலங்கையில் இன்ஃப்ளூயன்சா A H1N1 தொற்றின் அண்மைக்கால அதிகரிப்பு பதிவாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) தேசிய...

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்

ஓய்வு வயதைத் திருத்தி அனுபவமிக்க நிபுணர்களின் சேவையைப் பெற வேண்டும் – பிரதி அமைச்சர் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் தற்போது...

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

ஏழு ஊழியர்கள் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை...

More like this