Homeஉள்நாட்டு செய்திநீதிமன்றங்களில் குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்

spot_img

ஓய்வு வயதைத் திருத்தி அனுபவமிக்க நிபுணர்களின் சேவையைப் பெற வேண்டும் – பிரதி அமைச்சர்

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் தற்போது குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை துரிதமாகத் தீர்த்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக ஓய்வு வயது வரம்புகளைத் திருத்தி, அனுபவமிக்க நிபுணர்களின் சேவையை நாட்டிற்காகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊடகப் பிரதி அமைச்சர் சட்டத்தரணி கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

தற்போது இலங்கையின் சராசரி ஆயுட்காலம் 73 வயதைக் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், மக்கள் உடல் மற்றும் மன ரீதியாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் காலகட்டத்தில் அவர்களை ஓய்வுபெறச் செய்யும் வயது வரம்புகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அவர்களிடம் உள்ள முதிர்ச்சியான அனுபவங்களை நாட்டின் நலனுக்காக அதிகபட்சமாகப் பயன்படுத்த முடியும் எனவும், இவ்வாறான பெறுமதிமிக்க மனித வளத்தை குறைந்த வயதிலேயே அரச கட்டமைப்பிலிருந்து வெளியேற்றக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்குகள் தாமதமடைவதற்கான முக்கிய காரணியாக இருந்த அரச இரசாயனப் பரிசோதகர் அறிக்கைகளை வெளியிடும் வேகம் தற்போது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வள மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கும் முழு நீதித்துறை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

2026ஆம் ஆண்டில் அரச சேவைக்கு 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம்...

இலங்கையில் A H1N1 தொற்று அதிகரிப்பு

இலங்கையில் இன்ஃப்ளூயன்சா A H1N1 தொற்றின் அண்மைக்கால அதிகரிப்பு பதிவாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) தேசிய...

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

ஏழு ஊழியர்கள் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை...

சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா என்ற சந்தேகம்...

More like this