Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் A H1N1 தொற்று அதிகரிப்பு

இலங்கையில் A H1N1 தொற்று அதிகரிப்பு

spot_img

இலங்கையில் இன்ஃப்ளூயன்சா A H1N1 தொற்றின் அண்மைக்கால அதிகரிப்பு பதிவாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) தேசிய இன்ஃப்ளூயன்சா மையம் தெரிவித்துள்ளது.

தேசிய இன்ஃப்ளூயன்சா மையத்தின் ஆய்வக கண்காணிப்பில் H1N1 தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆலோசகர் வைரஸ் நிபுணர் வைத்தியர் கிரிஷான் ஜூட் ஜயமஹ தெரிவித்தார்.

காய்ச்சல், உடல் வலி அல்லது இன்ஃப்ளூயன்சா தொடர்பான ஏனைய அறிகுறிகள் ஏற்பட்டால், சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியமானது என வைத்தியர் ஜயமஹ சுட்டிக்காட்டினார். அதேபோன்று, இன்ஃப்ளூயன்சா அறிகுறிகள் உள்ளவர்கள் வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்தும்போதும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஃப்ளூயன்சா தொடர்பான சிக்கல்களுக்கு அதிக ஆபத்துள்ள குழுக்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, இவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்சாவின் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் ஒத்திருக்கக்கூடும் என்பதால், அது தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

பொதுவாக இன்ஃப்ளூயன்சா தொற்றின்போது காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, உடல் வலி மற்றும் அதிகளவான சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் அல்லது நிலைமை மோசமடைந்தால், குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம், கடுமையான பலவீனம் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

2026ஆம் ஆண்டில் அரச சேவைக்கு 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம்...

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்

ஓய்வு வயதைத் திருத்தி அனுபவமிக்க நிபுணர்களின் சேவையைப் பெற வேண்டும் – பிரதி அமைச்சர் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் தற்போது...

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

ஏழு ஊழியர்கள் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை...

சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா என்ற சந்தேகம்...

More like this