Homeஉள்நாட்டு செய்திஉலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

உலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

spot_img

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,150 டன் உலர் மிளகாயை விடுவிக்க சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்காததால், எதிர்வரும் மாதத்தில் நாட்டில் கடுமையான உலர் மிளகாய் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.150 கோடி பெறுமதியான இந்த மிளகாய் தொகை சந்தைக்கு விடப்படாததால் எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என அந்தச் சங்கம் வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLS) மட்டுமே பரிசோதித்து வந்த நிலையில், தற்போது சுகாதார அமைச்சும் தனியான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உலர் மிளகாய் மாதிரிகளில் அஃப்லாடொக்சின் (Aflatoxin) அளவு அனுமதிக்கப்பட்ட 12% வரம்பை விட அதிகமாக 12.5% இருப்பதாகக் கூறி, அந்த மிளகாய் தொகையை விடுவிக்க அதிகாரிகள் மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த மிளகாய் தொகையை விடுவிக்குமாறு கோரி சுகாதார அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் பலமுறை கலந்துரையாடிய போதிலும், ஒன்றரை மாதமாகியும் அந்தத் தொகையை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இறக்குமதியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களும் இலங்கைக்கு உலர் மிளகாய் வழங்குவதில் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த மிளகாய் தொகையை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் உலர் மிளகாய் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் அதன் விலையும் அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

லால் காந்தவின் அந்த ஏழு நாள் அனுபவம்!

கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை,...

‘லொக்கு பெட்டி’யின் தம்பி கொலை!

அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டி’யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை நேற்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, 92...

பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் தொடரும் – மத்திய வங்கி ஆளுநர்

தற்போது 8 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த ஆண்டு முழுவதும் மற்றும் அடுத்த ஆண்டு ஆரம்ப காலப்பகுதியிலும் உயர்ந்த...

More like this

லால் காந்தவின் அந்த ஏழு நாள் அனுபவம்!

கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை,...

‘லொக்கு பெட்டி’யின் தம்பி கொலை!

அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டி’யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை நேற்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, 92...