ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டதையடுத்து, அதனை ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




