Homeஉள்நாட்டு செய்திஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்திக்கு விளக்கமறியல்

spot_img

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ அமைப்பு ஊடாக ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் வைத்தியசாலைக்கு CT scanner இயந்திரம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாயை பெற்றுக்கொண்டு, அந்த இயந்திரத்தை வழங்காமல், அரச நிதியைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக நேர்மையற்ற முறையில் கையாடல் செய்ததாகக் ஷிரந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அரச வங்கி அதிகாரியாக இருந்த நிலையில், முறையான நடைமுறைகளை மீறி ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கிற்கு – குறித்த நிதியை மாற்றுவதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த குற்றச்சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரான ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு உதவியதன் மூலம், முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் லஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக அரச தரப்பு குற்றம் சாட்டியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறி, இரண்டாவது சந்தேகநபர் மீதும் – லஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும், குறித்த கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த அரச வங்கிக்குச் சொந்தமான நிதியைத் தனது சொந்த நலனுக்காகக் கையாடல் செய்ததாகக் கூறி, 1982 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

spot_img

Latest articles

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

ஈஸ்டர் தாக்குதல் மேலும் இருவருக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு...

ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி...

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயார்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன...

More like this