Homeஉள்நாட்டு செய்திகாவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம் இதோ

காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம் இதோ

spot_img

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம், நீண்டகாலமாக அதன் காலில் காணப்பட்ட புண் தீவிரமடைந்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் என சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை மருத்துவ அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யானையின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கான சில அடையாளங்கள் காணப்பட்ட போதிலும், அந்தத் துப்பாக்கிச் சூடுகள் மரணத்திற்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளன என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், யானையின் உடலில் காணப்பட்ட ஏனைய சில காயங்கள், மற்றைய காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வனஜீவராசிகள் தரவுகளின்படி, நாடு முழுவதும் தற்போது சுமார் 300 தந்தங்களைக் கொண்ட ஆண் யானைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

அவற்றில் உயிருக்கு அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ள யானைகளாக 17 யானைகள் மட்டுமே உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது சுமார் 30 தந்தங்களைக் கொண்ட யானைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

spot_img

Latest articles

கட்சிகளுக்கு பிக்குகளை இணைக்க முயற்சி; முடியாவிட்டால் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, கடந்தகால அரசாங்கங்களும் பௌத்த பிக்குகளை அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், அதற்கு முடியாதபோது பிக்குகள்...

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி வருமானம் 65.3 சதவீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட...

இலங்கையில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரிக்கலாம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்வதும், அதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள்...

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 2027ஆம் ஆண்டுக்கான...

More like this