– எரிசக்தி அமைச்சர்
சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களுக்கு அஞ்சி, தேவையற்ற வகையில் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான பதற்றமான செயற்பாடுகள், தற்போது நிலவும் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நுகர்வோர் தங்களது அன்றாடத் தேவைகளுக்குப் போதுமான அளவு எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தணியும் வரை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகத் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான ஆற்றல் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் எவ்விதத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.




