Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

ஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

spot_img

– உதய கம்மன்பில குற்றச்சாட்டு

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைப் பலவந்தமாக அகற்றி, சிறைச்சாலை கைதிகளுக்கான சீருடையை அணிவித்தபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக அந்தச் சம்பவத்தை வெளியில் இருந்த சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகப் பார்வையிட வசதி ஏற்படுத்தியதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஞானசார தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 08ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்தபோது, இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களைத் தேரர் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதன்போது உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,

“2018ஆம் ஆண்டைப் போலவே, இம்முறையும் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளுக்கான சீருடையை அணிவிக்க முயன்றபோது ஞானசார தேரர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு அவரது எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், இம்முறை அவ்வாறு கைவிட அவர்கள் தயாராக இருக்கவில்லை. மாறாக, பல அதிகாரிகள் ஒன்றிணைந்து தேரருக்குப் பலவந்தமாகச் சிறைச்சாலைச் சீருடையை அணிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், ஓர் அதிகாரி தனது கையடக்கத் தொலைபேசியின் கமெராவைச் செயற்படுத்தி, வேறொரு இடத்தில் இருந்த சக்திவாய்ந்த நபர் ஒருவர் இந்தப் பலவந்தமான நடவடிக்கையை நேரடியாகப் பார்வையிடுவதற்கு வசதி ஏற்படுத்தியதைத் தேரர் கண்டுள்ளார்.

ஞானசார தேரருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கடும் விருப்பமின்மை இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டத் தலைவர்களின் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது” என அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தேரரின் உடலில் எஞ்சியிருந்த காவி உடையின் இறுதி அடையாளமான இடைக்கச்சையும் அகற்றப்பட்டபோது அவர் கடும் மன அதிர்ச்சிக்கு உள்ளானதாகக் கம்மன்பில தெரிவித்தார்.

அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகள் கைகளை நீட்டியபோது ஏற்பட்ட மன அதிர்ச்சியின் காரணமாக, தேரர் அந்த இடைக்கச்சையை மேலே வீசியதாகவும், அது அறையில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியில் சிக்கிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சிறைச்சாலைச் சீருடை அணிவிக்கப்பட்டமை சிறைச்சாலை அதிகாரிகளின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களின் அரசியல் பழிவாங்கல் அழுத்தத்தின் காரணமாகவே இடம்பெற்றதாகவும் தாம் பொறுப்புடன் தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட...

ஆண் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவு!

இலங்கையில் ஆண் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) காலை திடீரென ஏற்பட்ட இதயம் தொடர்பான உடல்நலக் குறைவு...

More like this

ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட...

ஆண் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவு!

இலங்கையில் ஆண் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று...