Homeஉள்நாட்டு செய்தி15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா ரூ. 6,000 கற்றல் உபகரணக் கொடுப்பனவு!

15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா ரூ. 6,000 கற்றல் உபகரணக் கொடுப்பனவு!

spot_img

2027ஆம் கல்வியாண்டை முன்னிட்டு 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா ரூ. 6,000 பெறுமதியான பாடசாலை எழுதுபொருட்களுக்கான கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அத்துடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட மேலும் 5 இலட்சம் மாணவர்களுக்கு தலா ரூ. 6,000 பெறுமதியான வவுச்சர்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை எழுதுபொருட்களுக்கான கொடுப்பனவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

spot_img

Latest articles

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

ஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

– பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் குற்றச்சாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்ற முயற்சித்ததன்...

ஷிரந்திக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு...

நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற...

More like this