Homeஉள்நாட்டு செய்திநாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் அதிகரிப்பு

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் அதிகரிப்பு

spot_img

– தேவையற்ற அச்சம் வேண்டாம் என சுகாதாரப் பிரிவு அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில வாரங்களாக இன்புளுவென்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இதுகுறித்து மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என தொற்றுநோயியல் பிரிவின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக இன்புளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எமது கண்காணிப்பு முறைமையின் ஊடாக அவதானிக்க முடிகிறது.

கடந்த வாரம் பரிசோதனைக்காகப் பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவை இன்புளுவென்சா தொற்றுடையவை எனத் தெரியவந்துள்ளது. தற்போது பரவி வரும் இருமல், தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களில் பெரும்பாலானவை இன்புளுவென்சாவுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.

பொதுவாக, உரிய சிகிச்சையுடன் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் இந்நோய் பாரிய சிக்கல்களின்றிக் குணமடையக்கூடும். எனவே, இதுகுறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எனினும், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்புளுவென்சா தொற்று ஏற்பட்டால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இருமல் மற்றும் தும்மலின்போது வெளியேறும் சுவாசத் துளிகள் மூலமாகவும், தொற்றுள்ளவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலமாகவும் இந்நோய் பரவக்கூடும்.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பது முக்கியமாகும். அதேபோன்று, அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்திக் கைகளைக் கழுவுதல் மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்குவதற்கு தேரர்களுக்கு தடை உத்தரவு

கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுத்து, கொழும்பு கோட்டை...

பிக்குகள் போராட்டம் தொடர்கிறது

பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா...

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என...

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

More like this