Homeஉள்நாட்டு செய்திபௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

spot_img

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆபத்தை ஆரம்பத்திலிருந்தே தாம் உணர்ந்திருந்ததாகவும், இறுதியில் இந்த மதச்சார்பற்ற அரசாங்கம் பிக்குகளின் காவி உடைகளைக் களையும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு, அதிகாரிகளின் தொழில்நுட்பத் தவறை அடிப்படையாகக் கொண்டு இரத்துச் செய்யப்பட்டு, ஏற்கெனவே அனுபவித்து முடித்திருக்க வேண்டிய தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி என்றும் உலபனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தவறுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரிகளே தவிர, ஞானசார தேரர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பௌத்த சாசனத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பைத் தீர்த்துக்கொள்வதற்காக ஞானசார தேரரைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் உள்ளிட்ட 30 பிக்குகளின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றாமல், அவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடையுத்தரவைப் பெற்றுள்ளதாகவும் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வணக்கத்திற்குரிய வலியாபொல சுமங்கல தேரருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்குப் பின்னர், இவ்வாறானதொரு அவமானத்தை ஏற்படுத்தியிருப்பது தற்போதைய அரசாங்கமே என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பௌத்த சாசனத்திற்கு அரசாங்கம் ஏற்படுத்திய அவமதிப்பைச் சரிசெய்யும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், விரைவில் பெலவத்தைக்கு வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று (16) “சிவுரட்ட நீதி” (காவி உடைக்கு நீதி) என்ற போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தபோது உலபனே சுமங்கல தேரர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

Latest articles

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

– அமைச்சர் லால் காந்த கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என...

குறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும்...

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான...

More like this