Homeஉள்நாட்டு செய்திஇனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!

இனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!

spot_img

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி உடையைக் கழற்றவில்லை என கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரைச் சந்திப்பதற்காக மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றபோது அவர் இதனைக் கூறியதாக சட்டத்தரணி சூலா அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனது காவி உடையைக் கழற்றுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியதாகவும், இறுதியில் தான் கழற்றிய காவி உடை சிறைச்சாலையின் மேற்கூரையில் இருந்த மின்விசிறி ஒன்றில் தொங்கியதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது காவி உடை கழற்றப்படும் விதம் யாரோ ஒருவரால் தொலைபேசி ஊடாகப் பார்க்கப்பட்டதாகவும், காவி உடையைக் கழற்றுவதன் மூலம் பௌத்தர்கள் மற்றும் மகா சங்கத்தினர் மீதான பகையைத் தீர்த்துக்கொள்ள சிலர் விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இவை ஞானசார தேரர் தெரிவித்ததாக சட்டத்தரணி சூலா அதிகாரி ஊடாக வெளியாகியுள்ள கூற்றுகளாகும்.

உபசம்பதா பெற்ற பிக்குவான தான் மீண்டும் காவி உடையை அணிய வேண்டுமாயின், அது உரிய சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகத் தனது நிக்காயவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிக்காயவின் உரிய நடைமுறைகளுக்கு அமையவே மீண்டும் காவி உடையை அணிவேன் என்றும், வேறு எவரின் மூலமாகவும் அதனை அணியப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

சீருடை விவகாரத்தைப் வைத்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

சீருடை விவகாரத்தைப் பயன்படுத்தி நாசகாரச் செயல்களிலும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பல்வேறு நபர்களுக்கு எதிராகக்...

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

More like this