Homeஉள்நாட்டு செய்திநாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!

நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!

spot_img

இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானையாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ யானையைப் பாதுகாக்க ஆர்வமில்லாத நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை எனப் பிரபல விரிவுரையாளர் திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்துள்ளார்.

காவந்திஸ்ஸ யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறந்தது இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானை மட்டுமல்ல; தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானையாகும். உயரம், எடை மற்றும் தந்தங்களின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் அது மிகப்பெரியதாக விளங்கியது. இத்தகைய அரிய சொத்தொன்றைப் பாதுகாக்கும் ஆர்வம் ஒரு நாட்டுக்கு இல்லையென்றால், அந்த நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.

யானையின் காலில் காயம் ஏற்பட்டு, அது சிரமத்துடன் நடமாடியபோது, வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். ஆனால், வனவிலங்கு அதிகாரிகள் ஆரம்பத்தில் அது துப்பாக்கிச் சூட்டுக் காயமல்ல, தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம் எனக் கூறினர். பின்னர், அது துப்பாக்கிச் சூட்டுக் காயமா அல்லது தந்தத்தால் ஏற்பட்ட காயமா என விவாதிக்கப்பட்டது. இறுதியில், யானை இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்தது.

யானை கீழே விழுவதற்கு முன்னரே காயம் ஏற்பட்டதை அறிந்ததும், நான் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டேன். எனக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி, தனிப்பட்ட முறையிலும் தொடர்புகொண்டு, இந்த யானையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். யானை கீழே விழுந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை என்றும் வலியுறுத்தினேன். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அது கீழே விழும் வரை காத்திருந்தனர். உண்மையில், இந்த நாட்டைப் பற்றி நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

மேலும், தரையில் விழுந்து கிடக்கும் யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது, பொதுவாக அதன் கண்கள் மறைக்கப்படும். மனிதர்கள் நடமாடுவதைப் பார்த்து யானை பதற்றமடைவதைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், இந்த யானைக்கு சேலைன் ஏற்றப்பட்டதுடன், வாயிலும் நீர் ஊற்றப்பட்டது. தலதா மாளிகையின் யானைப் பிரிவைப் பார்வையிடும் மருத்துவர் தாரக அங்கு வந்து, கட்டப்பட்டிருந்த கட்டுகளை அகற்றி, யானையின் கண்ணைப் பரிசோதித்த பின்னரே அது ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இல்லையெனில், அதற்குத் தொடர்ந்து சேலைன் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்திருக்கும்.

அந்த யானை ஒரு போதிசத்துவரைப் போன்றது. இத்தகைய அரிய சொத்தைக் காப்பாற்றும் ஆர்வம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை. விலைமதிப்பிட முடியாத சொத்தொன்று அழிந்துவிட்டது. காவந்திஸ்ஸ இறக்கவில்லை; அது கொல்லப்பட்டது. இத்தகைய அரிய சொத்துகளைப் பாதுகாக்க முடியாதவர்கள் இருக்கும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என அவர் கடும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகிக்கிறது

– ஹரீன் பெர்னாண்டோ தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்...

கொழும்பில் சூனியப் பேய்!

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (20) மாலை விசேட பூஜை...

மகா சங்கத்தினரின் போராட்டங்களை ஒடுக்குவது ஆபத்தான போக்கு

– பாட்டளி சம்பிக்க ரணவக்க மகா சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வன்முறையற்ற முறையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதிலும்,...

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த...

More like this

தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகிக்கிறது

– ஹரீன் பெர்னாண்டோ தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப்...

கொழும்பில் சூனியப் பேய்!

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (20) மாலை விசேட பூஜை...

மகா சங்கத்தினரின் போராட்டங்களை ஒடுக்குவது ஆபத்தான போக்கு

– பாட்டளி சம்பிக்க ரணவக்க மகா சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வன்முறையற்ற முறையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதிலும்,...