Homeஉள்நாட்டு செய்திதற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகிக்கிறது

தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகிக்கிறது

spot_img

– ஹரீன் பெர்னாண்டோ

தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் ஆஜராகுவதற்காக நேற்று (20) பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தும் சந்தர்ப்பங்களில், அதற்கு எதிராக அரசாங்கம் போராட்டம் நடத்துவதை இலங்கையில் முதன்முறையாகக் காண்பதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் அரசாங்கம் பயணிக்கும் திசை தெளிவாகப் புலப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதுளையில் நடைபெற்ற அரசாங்கத்தின் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அந்தக் கூட்டத்தில் பெண்கள் அரசாங்கத்தின் பிரதான பலமாக அடையாளப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

பெண்கள் மீது தாம் மதிப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசியல் தொடர்பான அவர்களின் அறிவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களும், இன்சுலின் உற்பத்தித் தொழிற்சாலையை ஆரம்பிக்கும் திட்டமும் தமது கட்சி உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் என அவர் தெரிவித்தார்.

ஏனைய தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைத் திறந்து வைப்பதற்குப் பதிலாக, தற்போதைய அரசாங்கம் தனக்கெனச் சொந்தமான புதிய திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மெட்ரோ பஸ் சேவையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் எனக் குறிப்பிட்ட ஹரீன் பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எனினும் அவை நடைமுறைப்படுத்தப்படும் வேகம் மிகவும் மந்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!

இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானையாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ யானையைப் பாதுகாக்க ஆர்வமில்லாத நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை...

கொழும்பில் சூனியப் பேய்!

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (20) மாலை விசேட பூஜை...

மகா சங்கத்தினரின் போராட்டங்களை ஒடுக்குவது ஆபத்தான போக்கு

– பாட்டளி சம்பிக்க ரணவக்க மகா சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வன்முறையற்ற முறையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதிலும்,...

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த...

More like this