Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

இலங்கையில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

spot_img

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (2025 மற்றும் 2026) மின்சார வாகனங்களின் பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் 41,443 மின்சார வாகனங்களும், 2026ஆம் ஆண்டில் 39,700 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மின்சார வாகனப் பதிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், மின்சார வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ள போதிலும், நாடு முழுவதும் 4 மில்லியனுக்கும் அதிகமான உள் எரிப்பு இயந்திர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இந்த ஏற்றத்தாழ்வைக் குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பரவலாக ஊக்குவிப்பதற்கு தொடர்ச்சியான நிதிசார் ஊக்குவிப்புகள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கொள்கை ரீதியான குறைபாடுகள், பலவீனமான நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் போதிய மின்சார வாகன மின்னேற்ற நிலைய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற சவால்கள் தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற...

23 சொகுசு வாகனங்கள் தொடர்ந்தும் பயன்பாட்டில்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள், பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும்...

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் சில்லறை எரிபொருள் விநியோகத்தில்...

நாமலுக்கு பிணை மறுப்பு

கிரிஷ் நிறுவன விவகாரத்தில் 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள...

More like this