Homeஉள்நாட்டு செய்திபசில் ராஜபக்சவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

பசில் ராஜபக்சவைக் கைது செய்ய திறந்த பிடியாணை

spot_img

பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜேர்மன் நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குறித்த தென்னந்தோப்புக் காணி, சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்டதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பசில் ராஜபக்சவுடன், அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் முதித ஜயகொடி ஆகியோரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகப் பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர...

கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி

கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் தன்னால் முன்னெடுக்க முடியாமல் போன நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக...

சிறையில் உள்ள பிக்குகளை ஆடையைக் களையச் செய்யும் வகையில் சிறைச்சட்டத்தில் திருத்தம்?

– உதய கம்மன்பில குற்றச்சாட்டு பிக்குவொருவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக சங்க சபைக்கு அறிவிக்கப்பட்டு, 10...

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி, தற்போது நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்...

More like this