கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த தொகுதியில் 50 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 100 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் இருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு வியஜம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்ச, அந்த போதைப்பொருள் தொகுதியின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
இதன்போது 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களும் இன்று (05) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இங்கு கடற்படையினருக்கு விசேட நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கும் முப்படைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் வழங்குமாறு அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.




