வெற்று மதுபானப் போத்தல்களைத் திருப்பிக் கையளிக்கும்போது வழங்கப்படும் வைப்புத் தொகையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 750 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய வெற்று மதுபானப் போத்தலுக்காக இதுவரை அறவிடப்பட்ட 60 ரூபாய் வைப்புத் தொகை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரைப் போத்தலுக்கான வைப்புத் தொகை 40 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், கால் போத்தலுக்கான வைப்புத் தொகை 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபான உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் உடுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து அளவிலான வெற்று மதுபானப் போத்தல்களுக்குமான வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் வெற்று போத்தல்களைத் திருப்பிக் கையளிக்கும்போது பெற்றுக்கொள்ளும் பணமும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




