Homeஉள்நாட்டு செய்திரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் மூடக்கம்

ரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் மூடக்கம்

spot_img

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறித்த நான்கு வங்கிக் கணக்குகளிலும் சுமார் 40 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

ஹரக் கட்டா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் இருந்தபோது, அவரை விடுவிப்பதற்கும் பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறி ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க மற்றும் மற்றுமொரு நபர் குறித்த பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரும் முன்னதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து குறித்த 120 மில்லியன் ரூபாய் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாகவே ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொகுசு வாகனங்களை மூன்று மாதங்களுக்கு முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

Latest articles

3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப்...

தென் கொரியாவில் ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு...

நவம்பர் 14ஆம் திகதி வரும் LAUGFS எரிவாயுக் கப்பல் தொடர்பிலும் நம்பிக்கை இல்லை

– அமைச்சர் வசந்த சமரசிங்க உள்நாட்டு சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகம் செய்வதாக LAUGFS நிறுவனம் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம்...

வெற்று மதுபானப் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு

வெற்று மதுபானப் போத்தல்களைத் திருப்பிக் கையளிக்கும்போது வழங்கப்படும் வைப்புத் தொகையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மதுபானப்...

More like this