Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

இலங்கையில் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

spot_img

இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச நோயியல் நிறுவகத்தின் மார்பகக் குழி தொடர்பான விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையின் தரவுகள் மற்றும் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் தரவுகளை ஆய்வு செய்ததில், இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் இந்நோயின் பாதிப்பு சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, ஆண்களிடையே முக்கியமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உருவெடுத்து வருவதுடன், பெண்களிடையே அதிகம் காணப்படும் முதல் 10 புற்றுநோய் வகைகளுக்குள்ளும் இது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, புகைப்பிடிக்காத பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹசரலி பெர்னாண்டோ,

நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதம் புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டார்.

எனினும், புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிறர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையைச் சுவாசிப்பதும் (Second-hand Smoking) நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெளிப்புற மற்றும் உட்புற காற்று மாசுபாடுகளும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

வெளிப்புறக் காற்று மாசுபாடு பெரும்பாலும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் எரிபொருள் புகையினால் ஏற்படுகின்றது.

அதேவேளை, வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தி சமையல் செய்வதாலும் உட்புறக் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், போதிய காற்றோட்டம் இல்லாத வீடுகளில் இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

தீபாவளியை முன்னிட்டு பல பகுதிகளில் மதுபானசாலை பூட்டு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால்...

மக்கள் மீது அரசாங்கம் மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை

– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை...

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரையான காலப்பகுதியில் 67,765 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2025ஆம்...

ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தம்

இலங்கையில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

More like this

தீபாவளியை முன்னிட்டு பல பகுதிகளில் மதுபானசாலை பூட்டு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால்...

மக்கள் மீது அரசாங்கம் மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை

– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை...

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரையான காலப்பகுதியில் 67,765 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2025ஆம்...