Homeஉள்நாட்டு செய்திமத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!

spot_img

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரையான காலப்பகுதியில் 67,765 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் குறித்த விமான நிலையம் 4,906 மில்லியன் ரூபா நிகர நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு 2,523 மில்லியன் ரூபாவாக இருந்ததுடன், செயற்பாட்டு வருமானம் 257 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பயணிகள் போக்குவரத்து ஒரு மில்லியனாக இருந்தபோதிலும், நான்கு வருட காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 462,191 மாத்திரமே எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டியாக, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் 183.6 மில்லியன் சீன யுவான் செலுத்தப்பட்டுள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை அடுத்த ஆண்டு முதல் பகுதியில் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமானதும், வணிக ரீதியாகப் பொருத்தமானதுமான முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அடையாளம் காண எதிர்பார்த்துள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

Latest articles

மக்கள் மீது அரசாங்கம் மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை

– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை...

ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தம்

இலங்கையில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கையில் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக தேசிய...

மக்கள் மீது தேவையற்ற வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தவில்லை

– அமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச்சுமையைச் சுமத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில்...

More like this