தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
அதற்கமைய, மழையுடனான வானிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தொடர்ச்சியான கடும் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் 4 பேரின் உடல்களும் மீட்கப்படுள்ளது.




