முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 1.66 கோடி ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று (11) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்
வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.




