Homeஉள்நாட்டு செய்திவாகன விலைகள் குறையாது என இறக்குமதியாளர்கள் அறிவிப்பு

வாகன விலைகள் குறையாது என இறக்குமதியாளர்கள் அறிவிப்பு

spot_img

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான எந்தவொரு வரிச்சலுகையும் வழங்கப்படாதது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய வரிச்சலுகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது வழங்கப்படாததால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகளில் எவ்விதக் குறைவும் ஏற்படாது என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, வாகன இறக்குமதிக்கான வரிச்சலுகை வழங்கப்படாததற்கான காரணம் குறித்து தமது சங்கம் நிதி அமைச்சிடம் விளக்கம் கோரியதாகத் தெரிவித்தார்.

இதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து நிதி அமைச்சு விளக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, வாகன இறக்குமதிக்கு தற்போது நடைமுறையில் உள்ள மேலதிக வரி (Surcharge) உள்ளிட்ட ஏனைய வரிகள் தொடர்ந்து மாற்றமின்றி அமுலில் இருப்பதால், வாகனங்களின் விலைகளில் எந்தவிதக் குறைவும் ஏற்படாது என அரோஷ ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.900 பில்லியன் செலவு

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மட்டும் தற்போது ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும்...

அக்வான் சூறாவளி மேலும் வலுப்பெற வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளி, நவம்பர் 19ஆம் திகதியளவில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர்...

கொழும்பு மாநகர முதல்வர் சொல்வது பொய்

கொழும்பு மழைநீர் வடிகால் கட்டமைப்பால் மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியைத் தாங்க முடியாது என கொழும்பு மாநகர...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

More like this