Homeஉள்நாட்டு செய்திகொழும்பு மாநகர முதல்வர் சொல்வது பொய்

கொழும்பு மாநகர முதல்வர் சொல்வது பொய்

spot_img

கொழும்பு மழைநீர் வடிகால் கட்டமைப்பால் மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியைத் தாங்க முடியாது என கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லி பல்தசார் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பின் அனைத்து நீர்வழிப் பாதைகளும் மணித்தியாலத்திற்கு 120 மில்லிமீற்றர் மழைநீரை வெளியேற்றும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மாநகர முதல்வர் குறிப்பிட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த கட்டமைப்பினால் நாளொன்றுக்கு 476 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்குச் சமமான நீரின் அளவைக் கையாள முடியும் என்றும், அண்மைக் காலங்களில் இவ்வாறான கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாநகர முதல்வர் 60 இடங்களில் நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ள போதிலும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை முறையாகப் பராமரிக்கத் தவறிய நகர சபையே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களுக்கு நகர சபை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.900 பில்லியன் செலவு

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மட்டும் தற்போது ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும்...

வாகன விலைகள் குறையாது என இறக்குமதியாளர்கள் அறிவிப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான எந்தவொரு வரிச்சலுகையும் வழங்கப்படாதது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று நிதி...

அக்வான் சூறாவளி மேலும் வலுப்பெற வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளி, நவம்பர் 19ஆம் திகதியளவில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

More like this