இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 82 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 29 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.




