Homeஉள்நாட்டு செய்திஎரிபொருள் விநியோகப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்வு!

எரிபொருள் விநியோகப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்வு!

spot_img

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் மூன்றும் தற்போது போதியளவு எரிபொருளை விநியோகித்து வருவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போதியளவு எரிபொருளை விநியோகிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோக நடவடிக்கைகளை முறைப்படுத்தியுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் சீனத் தூதரகம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும் அறிவிக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவியதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தற்போது அனைத்து தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வழமைபோன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதுடன், எரிபொருள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு முன்பாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக எரிபொருள் கிடைக்காமையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு ஒரு மாதத்திற்கும் மேலாக தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியிருந்ததாகவும், அந்தக் காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகவே அதிகளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

டெங்கு பாதிப்பால் 82 பேர் உயிரிழப்பு!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 82 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி

கடுவெல சந்தியில் இன்று (19) காலை மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டடத்தில்...

புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க விசேட சட்ட ஏற்பாடுகள்

புதிய தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும்போது மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் விசேட சட்ட ஏற்பாடுகளை...

நாடளாவிய ரீதியில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான ஆரம்பகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் கீழ், பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை...

More like this