Homeஉள்நாட்டு செய்திவரவு செலவுத் திட்டத்தால் இளைஞர்களுக்கு கிடைத்த உண்மையான நன்மைகள் என்ன?

வரவு செலவுத் திட்டத்தால் இளைஞர்களுக்கு கிடைத்த உண்மையான நன்மைகள் என்ன?

spot_img

தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் இளைஞர் தலைமுறைக்கு கிடைத்துள்ள உண்மையான நன்மைகள் என்ன என்பது தொடர்பில் பாரிய கேள்விகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான அறிவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அதன் மூலம் முதலீடு செய்யப்படும் பணம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்குச் செல்கிறதா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், கோட்டை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண மற்றும் சட்டத்தரணி சுமுது கெகுலந்தல ஆகியோர் இக்கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி சுமுது கெகுலந்தல, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இளைஞர் தலைமுறைக்கு வழங்கப்பட்டுள்ள நடைமுறைப் பயன்கள் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இளைஞர்களுக்கு பங்குச் சந்தை தொடர்பில் கற்பித்து முதலீடுகளை ஊக்குவிக்கும் அரசாங்கம், அந்த முதலீட்டு முறைமையின் வெளிப்படைத்தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2028ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கடன் தவணைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள வருமானம் ஈட்டும் திட்டங்கள் எவை என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஊடாக அதன் உண்மையான நிலைமை வெளிப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது மக்களிடம் ஏற்கனவே இருந்த அழகான வாழ்க்கையையும் அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

spot_img

Latest articles

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு...

ஆளும் கட்சி படுதோல்வி!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது...

சமூக ஊடகங்கள் ஊடாக கொலை மிரட்டல்

தற்போது சில தரப்பினர் மதங்களை அவமதித்து, சமூகத்தில் குழப்பங்களையும் தூண்டுதல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மிஹிந்தலை ரஜமஹா...

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்

அரச சேவையில் தற்போது பணிகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் சிரமமான நிலைமையில் இருப்பதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி...

More like this

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு...

ஆளும் கட்சி படுதோல்வி!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது...

சமூக ஊடகங்கள் ஊடாக கொலை மிரட்டல்

தற்போது சில தரப்பினர் மதங்களை அவமதித்து, சமூகத்தில் குழப்பங்களையும் தூண்டுதல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மிஹிந்தலை ரஜமஹா...