தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது வாசிப்பில் 4 வாக்குகள் பெரும்பான்மையால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபைத் தலைவர் ஜயலத் எதிரிமன்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அதனைத் தோற்கடித்தன.
எதிராக வாக்களித்தவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள் மற்றும் சர்வஜன பலயவின் 1 உறுப்பினர் ஆகியோர் அடங்குகின்றனர்.
இதனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் 4 வாக்குகள் பெரும்பான்மையால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.




