Homeஉள்நாட்டு செய்தி2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு

spot_img

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரச முதலீட்டில் ரூ.45.2 பில்லியன், டிட்வா புயல் காரணமாக சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இத்திட்டங்களின் ஒட்டுமொத்த செயலாக்க முன்னேற்றம் சுமார் 27 சதவீதமாகவே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள், குறிப்பாக வீதி நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான தார் பற்றாக்குறை, கொள்முதல் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதங்கள், காணி சுவீகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை அரசின் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறைவடைவதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், திட்டங்களின் செயற்பாட்டு வரம்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளும் அரச முதலீட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் மந்தமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி வருமானம் 65.3 சதவீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட...

இலங்கையில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரிக்கலாம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்வதும், அதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள்...

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு...

ஆளும் கட்சி படுதோல்வி!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது...

More like this