Homeஉள்நாட்டு செய்திநாமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் சமூக ஊடகங்களில் தாக்குதல்

நாமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதால் சமூக ஊடகங்களில் தாக்குதல்

spot_img

சமூக ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்படும் ஆபாசமான கருத்துகள் மற்றும் அவதூறு தாக்குதல்களுக்கு அஞ்சுபவர்களுடன் அரசியலில் ஈடுபட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையும், அவர் தொடர்பில் உணர்வுபூர்வமாகச் செயல்படுவதையும் காரணமாகக் கொண்டு சிலர் தன்னை அவமானப்படுத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக ஆபாசமான கருத்துகளைப் பதிவிடுவது, தனது புகைப்படங்களைத் திரிபுபடுத்தி ஆடைகளை மாற்றி வெளியிடுவது மற்றும் மெசஞ்சர் ஊடாக ஆபாசமான வார்த்தைகளைக் கொண்ட செய்திகளை அனுப்புவது போன்றவற்றின் மூலம் தன்னைத் தாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக போதி பூஜைகளை நடத்துவதற்குக் கூட சில பௌத்த பிக்குகள் அஞ்சுவதாக மிலிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டுவராமல் இருந்திருந்தால், இன்று நாட்டில் பௌத்த பிக்குகள் அணியும் காவி உடை கூட எஞ்சியிருக்காது என்றும், அவ்வாறான சூழலில் பிக்குகள் தமது காவி உடைகளைக் களைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் ஆபாசமான தாக்குதல்களுக்கு அஞ்சும் நபர்களுடன் எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என மிலிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

அநுர குமார திஸாநாயக்கவுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உருவாகலாம்

ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இலஞ்ச விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் என...

பிக்குகளின் அரசியல் தலையீடுகள் வெறுப்பை ஏற்படுத்துகிறது!

பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீடுகள் காரணமாக தற்போது மத மற்றும் சமூக ரீதியில் பாதகமான சூழல் உருவாகியுள்ளதாகப் பிரபல...

அரச ஊழியர்களுக்கே அனைத்து நிதியையும் ஒதுக்க முடியாது

அரசாங்கம் வரி மூலம் திரட்டும் நிதியை மீண்டும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்துவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத்...

நவம்பர் 30ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (30) அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம்...

More like this