Homeஉள்நாட்டு செய்திபணம் அச்சிடவும் இல்லை, வெளிநாட்டுக் கடனும் பெறவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?

பணம் அச்சிடவும் இல்லை, வெளிநாட்டுக் கடனும் பெறவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?

spot_img

கடந்தகால அரசாங்கங்கள் பணம் அச்சிடுவதாகவும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தற்போதைய அரசாங்கம், அவ்வாறு பணம் அச்சிடாமலும் கடன் பெறாமலும் இருக்கும்போது பணவீக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாகப் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளார்.

வட்டி வீதங்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், வரவு செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கியும் முறையான பொருளாதார முன்னறிவிப்புகளை மேற்கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், அதனைத் தன்னால் சமர்ப்பிக்க முடியும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சார வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் வரிகளை விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் அவசியமில்லை என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையின் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை ஏனைய நாடுகளுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நவம்பர் 30க்குள் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம்

– உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறும்...

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளிடையே HIV தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல்...

கோழி இறைச்சியில் புரதம் குறைவு அதனால் விலை குறைக்கவில்லை

நெத்தலி மற்றும் கருவாடு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கோழி இறைச்சியில் குறைந்தளவு புரதச்சத்தே காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில்...

அரசாங்கத்தால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

அரசாங்கத்தினால் மாத்திரம் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின்...

More like this