பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், சாதாரண பொதுமக்களுக்கு அவ்வாறான எந்தவொரு தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




