Homeஉள்நாட்டு செய்திஅரசாங்கம் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்குத் தயாராகி வருகிறது

அரசாங்கம் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்குத் தயாராகி வருகிறது

spot_img

அநுராதபுரம் ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரு தரப்பையும் சேர்ந்த பிக்குகள் மற்றும் பொதுமக்களை பிணையில் விடுதலை செய்ய அநுராதபுரம் பிரதம நீதவான் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 07ஆம் திகதி ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பௌத்த சாசனத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தாரதன எனப்படும் நபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 12ஆம் திகதி குறித்த இடத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலாங்கொட கஸ்ஸப தேரர், வண. கஹட்டகஸ்திகிலிய விஜித தேரர், வண. பலாங்கொட அநுருத்த தேரர், வண. பிலிமத்தலாவே ரேவத தேரர் மற்றும் வண. தெனியாய சோரத தேரர் ஆகிய ஐந்து பிக்குகளும், இரண்டு பொதுமக்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ராஜாங்கனே சத்தாரதன எனப்படும் நபரிடம் சாமணேர அல்லது உபசம்பதா சான்றிதழ் எதுவும் இல்லை என்றும், இலங்கையின் எந்தவொரு பௌத்த பீடமும் அவரை பிக்குவாக அங்கீகரிக்கவில்லை என்றும் சட்டத்தரணி இந்திக இம்புல்பிட்டிய நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பிணையில் விடுவிக்கப்பட்டுச் செல்லும் போது சந்தேகநபரான கே. சமன் பொன்சேகா என்பவர் மீண்டும் அநுராதபுரத்திற்கு வரக்கூடாது என அச்சுறுத்தியதாக சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பலாங்கொட கஸ்ஸப தேரர், தாங்கள் ருவன்வெலி மகா சேயாவுக்காக உயிரையே அர்ப்பணித்துள்ளதால் தற்போது மரணமற்ற மனிதர்களாக மாறியுள்ளதாகவும், தங்களைக் கொல்லவோ தாக்கவோ வந்தாலும் அச்சுறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ராமஞ்ஞ மகா நிகாயத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் காவியுடை அணிந்து வந்து வன்முறையான சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னர் 300க்கும் மேற்பட்ட தலைக்கவசம் அணிந்த குழுவினர் வந்து பிக்குகளையும் பெண்களையும் தாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், முறைப்பாடு செய்வதற்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, பொலிஸ் அதிகாரிகள் முறைப்பாட்டைப் பதிவு செய்யாமல் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகவும் கஸ்ஸப தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

“நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒருபோதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை”

தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், வரவு செலவுத் திட்டத்திற்குப்...

இன்று மற்றும் நாளை TIN, PIN பெறலாம்!

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான PIN மற்றும் TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனைத்து...

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

வீடுகள் மற்றும் சொத்துக் கடன் உச்சவரம்பு 50 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு!

இதுவரை 30 இலட்சம் ரூபாவாகக் காணப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான கடன் உச்சவரம்பை 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க...

More like this

“நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒருபோதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை”

தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், வரவு செலவுத் திட்டத்திற்குப்...

இன்று மற்றும் நாளை TIN, PIN பெறலாம்!

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான PIN மற்றும் TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனைத்து...

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...