web log free
May 12, 2025
kumar

kumar

நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். 

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து நாட்டிற்குள் குழப்பத்தை தோற்றுவித்துள்ளதாக மகா நாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், புராதன, வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டில் ஏற்படக்கூடிய சிக்கல், பாதகமான நிலையை கருத்திற்கொண்டே ஏற்கனவே ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொண்டதாக  மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இறைமையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதர நெருக்கடியினால் பிராந்திய, உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மையை விபத்தில் ஆழ்த்தும் இத்தகைய பிரேரணைகளை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர். 

அண்மையில் நானுஓயாவில் பாரிய வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எயிதிர்சிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் மூன்று சரீரப் பிணைகளில் ரூ. தலா 100,000 மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார். 

ஹொரணையைச் சேர்ந்த 62 வயதான இவர், நுவரெலியா பொது வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பஸ் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 20 அன்று ரதல்லெ குறுக்குவழி வீதியில் பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் 100 அடி பள்ளத்தில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். 

வேன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட வேனில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் இருந்த மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஐந்து பேரும் உறவினர்கள். உயிரிழந்தவர்களில் 8, 12 மற்றும் 19 வயதுடைய மூன்று குழந்தைகளும் அடங்குவர். 

தேசிய மக்கள் இராணுவத்தின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை தாம் மதிப்பதாகவும் அவர் தனக்கு எதிரியல்ல எனவும் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் திரு.அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியுடன் சிவில் சமூக உடன்படிக்கைக்கு வரத் தயார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்காக சமகி ஜன பலவேகவை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் குழுவொன்று தன்னுடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

திரு.அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் மேடைக்கு அருகில் எந்த நேரத்திலும் நடமாட முடியும் எனவும் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இதற்கிடையில், 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும்" என்று PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்பார்த்த மழை பெய்யாததால் நீர்மின்சார உற்பத்திக்காக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தடை விதித்துள்ளதால் 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இதற்கிடையில், 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

"இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும்" என்று PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

75 ஆவது தேசிய சுதந்திர தினம் மற்றும் அதன் ஒத்திகை நடைபெறவுள்ளதால் கொழும்பில் இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் சாரதிகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு குறிப்பாக ஒத்திகையின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் காலையிலும், 4 ஆம் திகதியும் விசேட போக்குவரத்து ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த வீதிகளைப் பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.

கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், உரிய மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Octane 92 பெற்றோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 400 ரூபாவாகும். 

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

அநுரகுமார மேலும் தெரிவிக்கையில்,

"மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கமான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளது. ஆகவே, மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை எதிர்க்கப் போவதில்லை" என தெரிவித்துள்ளார். 

 

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது. ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யுமாறும் கனடா பரிந்துரைத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது

2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால் ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

2008 ல் முதல் தடவையாகவும் 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்இ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் விரிவான ஆலோசனைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அறிக்கை தயாரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் இதே காலகட்டத்தில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீளாய்வுக்கான அறிக்கையை முன்னரே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கை மூலம் சமர்பிக்கவுள்ளார்.

இதில் மனித உரிமை மேம்படுத்த அரசாங்கம் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அமுல்படுத்திய விதம் குறித்தும் அவர் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தவுள்ளார்

 

கொழும்பு கோட்டை கிரிஷ் டிரான்ஸ்வர்ட் சதுக்கத்தின் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக ஜூன் 21ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு கோட்டை நீதவான் இன்று (01) உத்தரவிட்டுள்ளார். .

சுமார் 70 மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பவம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், முறைப்பாட்டின் சார்பில் அந்தப் பிரிவு ஆஜராகி நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் தனது கடைசி உயிலை எழுதி வைத்திருந்ததை பொலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கடைசி உயில் அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி உயிலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரது சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி உயிலின் விவரங்கள் தற்போது காவல்துறை வசம் உள்ளதால், மரணம் தொடர்பான விசாரணைகள் புதிய திசையில் சென்றுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd