உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் ,அனுமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி சில வெறுக்கத்தக்க சம்பவங்கள் வேட்பாளர்கள் தெரிவுகளில் போது இடம்பெற்றுள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் சேவை குறித்து எவ்விதத்திலும் கண்டு கொள்ளாமல் நாட்காலிகளை சூடாக்கிக்கொண்டிருந்த பழைய முகங்களை சில கட்சிகள் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கவுள்ளதாக பெரும்பாலான மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தாம் தெரிவு செய்து அனுப்பும் வேட்பாளர் எப்படியானவர் என்பது குறித்த தெளிவுகள் அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ளன. அதாவது குறித்த நபர் உள்ளூராட்சி மன்றங்களுக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது அதையும் தாண்டி பாராளுமன்றத்துக்கோ செல்லும் வரையில், அவர் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்றவராகவே இருப்பார் என்பதில் சந்தேகங்களில்லை.
ஆனால் உள்ளே சென்ற பிறகு அவரின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களே இங்கு முக்கியமானவை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே மக்கள் சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
எதிர்கட்சி வரிசைகளில் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்கின்றனர். விவாதங்களை முன்னெடுக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் போது தைரியமாக மக்கள் முன் சென்று வாக்கு கேட்கின்றனர்.
ஆனால் ஆளும் தரப்பிலிருந்து கொண்டு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உறுப்பினர்களில் அதிகமானோர் முதலில் தாம் கரையேறும் வழிகளையே பார்க்கின்றனர். மக்களைப் பற்றிய சிந்தனை அவர்களுக்கு அடுத்த தேர்தல் வரும் வரை தோன்றுவதில்லை. காரணம் அவர்கள் அதிகார பீடத்துக்கு சென்றதன் நோக்கம் அதுவல்ல.
அடுத்த தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் அவர்கள் இயன்ற வரை தமக்கும் தமது உறவினர்களுக்கும் சொத்துகளை சேர்த்து விட்டு பின்பு கட்சி பணிகளில் தம்மை இணைத்துக்கொள்வர். கட்சிகளின் தலைமைத்துவங்கள் இதை கண்டு கொள்வதில்லை. ஏனெனில் உறுப்பினர்கள் அடிக்கும் கொள்ளைகளில் அவர்களுக்கும் பங்கில்லாமலில்லை.
மக்களோடு மக்களாக அவர்கள் அருகிலிருந்து அரசியல் செய்யும் நிறுவனங்களாவே உள்ளூராட்சி சபைகள் விளங்குகின்றன. ஆனால் இப்போது சில உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அவை பாராளுமன்றம் அளவுக்கு மக்களிடமிருந்து தூரபோய்க் கொண்டிருக்கின்றன.
எவ்விதத்திலும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயது, தேடிப்பார்க்காது தமக்குரிய சலுகைகளை மாத்திரம் மாத்திரம் குறியாகக்கொண்டு சில உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மீதான நம்பிக்கைகளை இழக்கச்செய்துள்ளது.
அவர்களை மீண்டும் தெரிவு செய்யும் வகையில் சில கட்சித் தலைமைகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர்களை இடம்பெறச்செய்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட ஐந்து வருடங்களாக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நாட்காலிகளை சூடாக்கிச் சென்றவர்களும் எவ்வித பிரச்சினைகளுமின்றி மீண்டும் போட்டி போட தயாராகி வருகின்றனர்.
வேட்பாளர்களைத் தெரிவு செய்ய பல கட்சிகள் சமூக ஊடகங்களில் விண்ணப்பங்களை கோரியிருந்தன. நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் விண்ணப்பிப்போர் எவ்வாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்த எந்த கரிசனைகளையும் எந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அது குறித்த அக்கறையை இப்போதுள்ள கட்சிகளிடம் எதிர்ப்பார்க்க முடியாது.
பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையோர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் வலம் வரும் போது, உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தால் என்ன என்ற மன ஆறுதல் தான் இவற்றுக்கெல்லாம் காரணம். தேசிய கட்சிகள் அவ்வாறான கொள்கைகளில் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஏன் அந்த வழியை பின்பற்ற வேண்டும்?
நேர்மையான அரசியலையும் ஜனநாயக பண்புகளையும் நேசிக்கும் அதே வேளை அதன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்களும் கள அரசியலில் ஈடுபடாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஜனரஞ்சக அரசியலை முன்னெடுக்கும் பாரம்பரிய கட்சிகள் இந்த தவறுகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் செய்கின்றன. இதன் காரணமாகவே சில கட்சிகளையும் உறுப்பினர்களையும் குற்றப்பரம்பரையாகவே மக்கள் நோக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.
தேர்தல்கள் மற்றும் வாக்களித்தல் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை தோன்றுவதற்கு இவையே பிரதான காரணிகள். மேலும் நல்லாட்சி எண்ணக்கருக்கள், அது தொடர்பான சிந்தனைகள் உருவாவதையும் இவ்வாறான செயற்பாடுகள் தடுக்கின்றன. அரசியல் நிர்வாக கட்டமைப்பில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கீழ் மட்டத்திலிருந்து மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அமைப்புகள். இவற்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் கட்சித் தலைவர்களா அல்லது வாக்களிக்கும் மக்களா ?
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்க்குமாரும் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் ஆஜராகி இருந்தனர்.
மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்முறையீட்டாளர் சார்பில் ஆஜராகி, சரணடைந்த புலிகள் தொடர்பான விவர பட்டியல் இராணுவத்திடம் இருப்பதாகக்கூறி ஆதாரங்களை முன்வைத்தார்.
இதன்போது, இராணுவம் சார்பில் இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ரவிந்திர பத்திரகே இணைய வழியில் ஆணைக்குழுவில் ஆஜரானமைக்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
இதுவொரு முக்கியமான விசாரணை என்பதால் நேரடியாகவே ஆணைக்குழுவுக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என இராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி மார்ச் 28ஆம் திகதி இராணுவம் நேரடியாக ஆணைக்குழுவில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலறியும் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என RTI சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புலிகள் தொடர்பான தகவல்களை கோரும் இந்த விண்ணப்பத்துக்கு சுமார் 4 வருடங்களாக பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன வெளிநாடு செல்ல விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வியாபார நோக்கத்திற்காக இந்தியா செல்லவிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்சேபனை காரணமாக கோரிக்கையை நிராகரிக்க கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் இன்று (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தது
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நாளை (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த சர்வகட்சி கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன். தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தனது பிரதேச அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் தேர்தலுக்கான கூட்டங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் தொகுதிகளில் உள்ள கட்சி வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அண்மையில் நடைபெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர் போராட்ட களத்தில் இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமரான பின்னர், அவரது குழுவினரின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ஐ.தே.க.வினர் போராட்ட களத்தை விட்டு வெளியேறியதாகவும் நாணயக்கார குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் எதுவும் நடைபெறாததால், அவர்கள் வெளியேறுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், போராட்டத்தின் மூலமே ரணில் விக்ரமசிங்கவின் உயிர்வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது பல அரசியல்வாதிகளுக்கு இல்லாத வாசிப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்ததுடன், போராட்டத்திற்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பிரதமராக வர திட்டமிட்டிருந்தார் என்றும் கூறினார்.
“அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடச் சென்ற போராட்டக்குழுவினர் தாம் பிரதமராக வருவதற்குத் தயாராகி வருவதாகத் தம்மிடம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏசியன் மிரருடன் இடம்பெற்ற நிகழ்ச்சியின் காணொளி கீழே,
குரு தனது ராசியான மீனத்தில் சஞ்சரிக்கிறது. இது தவிர, பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் நுழையும். ஒரே ராசியில் குருவும் சுக்கிரனும் இணைவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் ராஜயோகம் உருவாகிறது.
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் ஒருவருக்கு பொருளாதார முன்னேற்றம், செல்வம், வசதி, வாய்ப்பு, ஆடம்பரம், செல்வத்தை வழங்கக்கூடியவர். அதே போன்று சுப கிரகமான குருபகவானின் பார்வைக்கு அற்புதமான பலன்கள் உண்டு. குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும் என கூறுவதுண்டு.
தலைப்புகள்
குரு தனது ராசியான மீனத்தில் சஞ்சரிக்கிறது. இது தவிர, பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் நுழையும். ஒரே ராசியில் குருவும் சுக்கிரனும் இணைவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் ராஜயோகம் உருவாகிறது.
மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் ஹன்ஸ மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாகி வருகிறது. மேலும், சனி அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பதால், இந்த ராசிகளுக்கு வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உங்கள் திரிகோண வீட்டில் நடக்கப் போகிறது. சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதாலும், குரு தன் ராசியில் இருப்பதாலும் சொத்து, வாகனங்கள் வாங்கலாம். இது தவிர, குருவின் தாக்கத்தால், பங்குகள், ஊகங்கள் மற்றும் லாட்டரி போன்றவற்றில் பணம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன
கன்னி ராசிக்காரர்கள் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தினசரி வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். கூட்டு முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் பண வரவு இருக்கும். உங்கள் மன ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதார பிரச்சினைகளால் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் மீண்டும் மனநோய்கள் அதிகரித்து வைத்தியசாலையில் அனுமதிப்பவர்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் தங்குவதற்கு எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் மனநோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகம் உருவாகியுள்ளதாகவும், சமூகத்தின் மீதான வெறுப்பை வெளியிட்டு பல இளைஞர்கள் இந்த அழுத்தத்தை போக்குவதாகவும் கூறினார்.
ரூமி ரூபன் மேலும் கூறுகையில், பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மன உளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிபுணர் வைத்தியர், கல்வி நடவடிக்கைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் கணிசமானோர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியின் காரணமாக மொபைல் போன்களுக்கு அடிமையான ஏராளமான குழந்தைகளும் பல்வேறு மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் வெளிப்படுத்தினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.
ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய தொகை 15 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.