web log free
May 08, 2025
kumar

kumar

காஸ் சிலிண்டரின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 5300 ரூபாய்.

அத்துடன், 5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 2120 ரூபாய். 

ஏற்கனவே லிட்ரோ கேஸ் நிறுவனமும் விலை குறைப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கோடிக்கணக்கான ரூபாவை முதலீடு செய்த திலினி பிரியமாலியின் பின்னால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர்  நாமல் ராஜபக்ஷ,  இருப்பதாக ஜேவிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

திலினி பிரியமாலி தொடர்பான சம்பவத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யின் பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உள்ளிட்ட பொய்யான செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் உண்மையாகவே தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டது. 

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்பதை நாடு வெளிப்படுத்த வேண்டும் என்றும், கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜானகி சிறிவர்தனவுக்கு அதிக பணம் வழங்கப்பட்டதாகவும், ஜானகி சிறிவர்தன நாமல் ராஜபக்சவின் தோழி எனவும் திலினி பிரியமாலி சிறையில் இருந்து வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எனவே, இந்த சதி மோசடி பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் இப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. .
இரண்டு வாகனங்களும் சந்தேகநபர் தனது தந்தை சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய சந்தேகநபரை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் 263 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது புதிய மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்காக பீடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று மருத்துவ பீடத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்தார்.

நிகழ்ச்சி நிரலில் இருந்து மாணவர்கள் தன்னிச்சையாக பீடாதிபதியின் முகவரியை நீக்கிவிட்டு, விழாவில் கலந்து கொள்ளும் புதிய மாணவர்களை அவர்கள் கட்டளையிட்ட உடையை அணியுமாறு வற்புறுத்தியதாக அவர் கூறினார்.

ஆண் மாணவர்களுக்கு சட்டை, நீளமான கால்சட்டை மற்றும் டை அணியுமாறும், மாணவிகள் புடவை உடுத்துமாறும், அழகு நிலையத்தில் ஒப்பனை செய்யுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

தற்போது நிலவும் பொருளாதார தடைகளை கருத்தில் கொண்டு மூத்தவர்களின் தூண்டுதலின் பேரில் அழகு நிலையங்களில் ஆடைகள் மற்றும் அலங்காரம் செய்வதற்கான செலவுகளை புதியவர்கள் ஏற்கும் நிலையில் இல்லை என பேராசிரியர் அமரசேன தெரிவித்தார்.

குறித்த சிரேஷ்ட மாணவர்களின் குழு தமக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டினை மீறி புதிதாக உள்வாங்குபவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் கூறினார்.

ராகிங் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன் என்றார்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சைப்பெறுவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறுவதாகவும், மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் (10) குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர்கள் நேற்று மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அந்த வலயங்களுக்கு இரவில் வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியாமாலியிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றுமொரு பெண் கைதி ஒருவரினால் வழங்கப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் சிறைச்சாலையின் மகளிர் பிரிவு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களிடம் இருந்து தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சிறிய கையடக்கத் தொலைபேசி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 11-ம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் வருமாறு 

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமா ளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபட, நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூல மாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவு கள் ஏற்படும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்கும். உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபட்டு நாளைத் தொடங்க, நன்மைகள் கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தடைப்பட்ட பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகு. அதிகாரிகளின் சந்திப் பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங் குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்த னையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டி களைச் சமாளிக்க வேண்டி வரும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்ப தால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சரபேஸ்வரர் வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பொறுமை அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும். பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

கும்ப ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

மீன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அரசாங்கம் பதவி வழங்கியுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன், சிரேஷ்ட ஆலோசகராக சந்திரிக்கா குமாரதுங்கவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவது அவசர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இருப்பதால், அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வேலைத்திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படுவதற்கு இணங்கியதாக தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த போது கோடீஸ்வரர்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd