எதிர்வரும் திங்கட் கிழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி 08 செயலணிகள் நிறுவப்பட்டள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் குறித்த 08 செயலணிகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருக்கும் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
“இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசா கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பசியால் சாகும் நிலையில் இருந்தாலும் ஐந்து காசு கூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள்.
IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும் என்றார். இந்த அரச பயங்கரவாதம் இருந்தால், இந்த உதவிகளுக்கு நாம் தகுதியானவர்களா இல்லையா என்ற கேள்வி எழுகிறது என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கையின் பிரகாரம், அவர் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா கூறுகையில், எதிர்வரும் நாட்கள், நாட்டில் தேங்காய் விளைச்சல் குறைவான காலப் பகுதி என்பதனால் சந்தைக்கு போதியளவு தேங்காய் நிரம்பல் செய்ய முடியாத நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
தமிழில் வானம், ஜில் ஜங் ஜக் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜாஸ்மின் பாசின். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே இந்தி பிக்பாஸ் 14-வது சீசனில் பங்கேற்றும் பிரபலமானார். ஜாஸ்மின் பாசின் இந்நிலையில் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வந்ததாக ஜாஸ்மின் பாசின் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
"நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்தபிறகு பல கஷ்டங்களை சந்தித்தேன். பலர் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள். மோசமான வார்த்தைகளால் விமர்சித்தனர். மேலும் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாக சிலரிடம் இருந்து பாலியல் மிரட்டல்களும் வந்தன.
ஜாஸ்மின் பாசின் இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, அதில் இருந்து விடுபட முடியாமல் தவித்தேன். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். என்னை நேசிப்பவர்களிடம் அன்பு காட்டுவேன், என்மீது வெறுப்பு காட்டினால் அது அவர்களின் விருப்பம்" என்றார்.
கேகாலையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை கலுகல்ல ஐக்கியமக்கள் சக்தி(SJB) அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் கேகாலை, ஹபுதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களுகல்லவில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) அலுவலகத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அறையில் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த பெண் மூன்றாம் தரப்பினரால் சுடப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிசக்தி அமைச்சு ஒரு வருடத்தில் 699 மில்லியன் ரூபாவை அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடுவதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியத்தில் இருந்து கொலன்னாவ முனையத்திற்கு 75 வருடங்களுக்கு மேற்பட்ட 10 அங்குல விட்டம் கொண்ட 5 குழாய் அமைப்புகளின் ஊடாக எரிபொருள் கொண்டு செல்லப்படுவதாகவும், இன்று கசிவு மற்றும் சிதைவுகளுடன் 2 குழாய் அமைப்புகளே பாவனையில் உள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த குழாய் அமைப்பு அதன் செயல்பாட்டு மற்றும் பயனுள்ள ஆயுட்காலத்தை தாண்டிவிட்டதால், குறைந்தபட்சம் மணிக்கு 200 மெட்ரிக் டன் அழுத்தத்தில் எரிபொருள் இறக்கப்படுவதாகவும், 40,000 மெட்ரிக் டன் கப்பலை இறக்குவதற்கு குறைந்தது 8 நாட்கள் ஆகும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான எரிசக்தி துறையின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையானது, அதிகபட்சமாக 04 நாட்களுக்கு, அதாவது 96 மணிநேரத்திற்கு எரிபொருள் இறங்கும் நடவடிக்கைகளுக்கு கப்பல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்வதால், ஒரு நாளுக்கான தாமதக் கட்டணமாக 18,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று விளக்கியுள்ளது.
அதன்படி, ஒரு கப்பல் எரிபொருளை இறக்குவதற்கு 7 நாட்கள் எடுத்துக் கொள்வதால், நாளொன்றுக்கு ஒரு கப்பலுக்கு 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகவும், தாமதமாக 57 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகவும் செலவழிக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒரு மாதத்திற்கான கட்டணம் மட்டும். 5,750 மீற்றர் நீளமுள்ள எரிபொருள் போக்குவரத்துக் குழாய் அமைப்பின் தரைப் பிரிவின் திருத்தப் பணிகளுக்காக 94 மில்லியன் ரூபா செலவிடப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
பிறந்து 51 நாட்களே ஆன குழந்தை ஒன்று அனாதை இல்லத்திற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தின் வாகன தரிப்பிடத்தில் குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்வந்ததுடன், பின்னர் குழந்தையை தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரவில் ஆண் ஒருவர் வந்து குழந்தையை விட்டுச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்மொழிந்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை இனியும் ஒத்திவைக்க முடியாது எனவும், எனவே ஜனாதிபதிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவளித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஸ்திரமான அரசாங்கத்தை ஜனாதிபதி அமைக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
இதன்மூலம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமை ஒப்பந்தம் காரணமாகவோ அல்லது வழக்குகளில் இருந்து தப்பிக்கவோ அல்ல என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக ஆதரவு கொடுக்க முடிவு செய்ததாகவும் போட்டியிட முன்வந்த டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்றும், சர்வதேச சமூகத்தை கையாள்வதில் அவருக்கு இருந்த முதிர்ச்சி மிகவும் முக்கியமானது என்றும் எம்.பி. நாமல் குறிப்பிட்டுள்ளார்.