அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அவருக்கு பலம் வாய்ந்த அமைச்சர் பதவி வழங்கப்படும்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் தனியார் துறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுமுறை பயணங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அமைச்சர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக தனியார் துறையினர் அதிகாரிகளை அலுவலகங்களுக்கு அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை இணைய வழியில் கடமையில் அமர்த்துமாறும் கோருவதாக விஜேசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை லொரியில் ஏற்றி பொலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஒரு பௌத்த துறவியும் நான்கு பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்ததுள்ளதுடன் மற்றுமொரு நுழைவாயிலையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறைந்துள்ளனர்.
தற்போதுள்ள எரிபொருள் வரிசையை மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு கடுமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொழில்முறை முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து தனியார் வாகனங்களுக்கும் இலக்கத் தட்டில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருள் நிரப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் தற்போதுள்ள வரிசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்றும் அவர் கூறினார்.
களுத்துறை மீகஹதென்ன பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டில்லியில் பிரகதி மைதான மறுவளர்ச்சி திட்டப்படி ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 920 கோடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.
இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிரதான சுரங்கப்பாதை மற்றும் 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் மோடி, சுரங்கப்பாதையை நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிதறி கிடந்த குப்பைகள் மற்றும் பாட்டீல்களை எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டார்.
அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல.
சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மோடி, கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் பாட்டீல்கள், தட்டுகள் மற்றும் குப்பைகளை அகற்றினார்.
தூய்மை பாரத இயக்கம் அல்லது நமாமி கங்கா திட்டத்தில் தூய்மைக்கு பிரதமர் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
தூய்மையை வலியுறுத்தி கடந்த 2014 அக்.,2 ல் தூய்மை பாரத இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில், முக்கியமாக ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை கட்டுதல், பொது இடங்களில் கழிப்பறை மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
வத்தளை வெலிகடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்த வத்தளை பொலிஸார், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கிகளில் இரண்டு டபுள் பீப்ரல் துப்பாக்கிகள், ஒரு பீப்பாய் துப்பாக்கி மற்றும் 22 துப்பாக்கி ரவைகள் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.
வீட்டில் துப்பாக்கிகளுடன் 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பெற்ரோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
23ம் திகதி பெட்ரோல் ஏந்திய கப்பல் ஒன்று தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 23ம் திகதிக்குள் இயல்பு நிலை திரும்பும் எனவும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டுக்கு கிடைக்கும் பெட்ரோல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், பெட்ரோல் அத்தியாவசியம் இல்லை என்றால் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சை பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
இந்த அமைச்சுப் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் புதிய அமைச்சராக பதவியேற்க பவித்ரா வன்னியாராச்சி தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.