web log free
May 14, 2025
kumar

kumar

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கை தகவலை இலங்கை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட கூடும் எனவும் அதனால் அமெரிக்க பிரஜைகளையும் ராஜதந்திரிகளையும் அப்பகுதிக்கு விஜயம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போலீஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ  புலனாய்வு பிரிவினருக்கு இவ்வாறான தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அருகம்பே பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததாகவும் எனினும் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இலங்கை நடிகர் சரித் அபேசிங்க 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சரித் அபேசிங்க, தான் சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

“அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகர் என்று நினைக்க வேண்டாம். என்னுடைய வேலையைப் பார்த்தால் நான் எப்போதும் அரசியலைப் பற்றித்தான் பேசுவேன். திரையுலகில் மட்டுமே இருந்த எனது அரசியல் செயல்பாடுகள் தற்போது உண்மையான அரசியல் களத்தை எட்டியுள்ளது" என்றார்.

கொழும்பு மாவட்டத்தின் 15 தொகுதிகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டத்தை 23 நாட்களுக்குள் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக சரித் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க தாம் நம்புவதாகவும், அதற்கு இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.அதனை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக 25000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தையில் கம்பனிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து நாளை முதல் முற்பணமாக 25000 ரூபாய் வழங்கப்படவுள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கண்டி பிரதான வீதியிலுள்ள கார் விற்பனை நிலைய உரிமையாளரின் மகனின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத நவீன கார் மற்றும் ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1997 என்ற இலக்கத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்கள் எதையும் குடியிருப்பாளர்கள் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்த போலீசார், இரு கார்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரின் மருமகன் என கூறப்படும் கயான் சேரம் சட்டத்தரணி ஒருவருடன் நேற்று (21) பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்க வந்ததாக அவர் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம். பிரியந்த ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட விடயத்தை சரி செய்வதற்கு ஏற்ற உத்தரவாக இருந்தால், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, காலி உலுவித்திகே பிரதான கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்களை மாற்றுவது முக்கியமல்ல.தலைமைத்துவம் முக்கியம்.

ரணில் விக்கிரமசிங்க தனது அணிக்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மேலும் தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்காக உழைக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக வஜிர தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது.

ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர்.

ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.

ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். சிர்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இரானுவர்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.

வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை உப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது.

அதனை நீங்கள் கண்டி்க்கிறோம்.மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரம் இருக்கலாம்.

அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.

ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர். Mmm

மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 8 வாகனங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd