web log free
July 22, 2025
kumar

kumar

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார். திலித் தலைமையிலான கூட்டணி இன்று மாலை கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். 

பாரிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல தொடர்புடைய அமைப்புக்கள் இன்று பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் கலே பியதஸ்ஸி தேரர், லகும்தெனியே பியரதன, தம்பகொல்ல பதுமசிறி தேரர் மற்றும் கலாநிதி சமிந்த மலலசேகர, கலாநிதி இந்திவரி அக்குரேகொட, கலாநிதி மஹிந்த பெரேரா, பேராசிரியர் ராகுல் தண்டெனிய, சிறிமசிறி பாபுஆராச்சி, தொழிலதிபர் குமுது ஹெட்டிகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் அரசியல் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ஷமல் செனரத் இங்கு தலைமை தாங்கினார்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு குடும்பத் தகராறுகள் 1479 அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் நாட்டில் ஒரு இலட்சத்து பதின்மூன்றாயிரத்து நூற்று எண்பத்தி எட்டு (113188) குடும்பத் தகராறுகள் பதிவாகியிருந்ததுடன் 2022ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று ஒன்பது (111709) பதிவாகியிருந்தன.

2023ஆம் ஆண்டுக்கான இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளால் ஏற்பட்ட பத்தாயிரத்து நானூற்று எட்டு (10408) குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன, மேலும் 2022 ஆம் ஆண்டில் 9636 குடும்பத் தகராறுகள் பதிவாகும்.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சாதாரண உறவுகளால் ஏற்படும் தகராறுகளின் எண்ணிக்கை 772 அதிகரித்துள்ளது.

கணவன் அல்லது மனைவியிடமிருந்து துன்புறுத்தல், புறக்கணிப்பு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பாக 2023 இல் இருபத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்து நான்கு (22584) புகார்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி போதனா வைத்தியசாலையின் மனநோய் நிபுணர் டாக்டர் ரூமி ரூபன் கருத்துத் தெரிவிக்கையில், திருமணமான குடும்பக் கூட்டுத்தாபனத்திற்குப் புறம்பான பல்வேறு காரணங்களால், ஒரு பெண்ணோ ஆணோ திருப்திப்படுத்த முடியாத பாலுறவு ஆசைகளினால், காதல் இல்லாமையால், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக என்றார். 

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் நேற்று (01) இரவு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அரசியல் நோக்கத்திற்காக பொய்யான செய்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பது எனது நம்பிக்கை.

எனவே இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் இன்று (02) முற்பகல் சபாநாயகர் ஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 7 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. 

ஆகஸ்ட் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு மருத்துவ (திருத்தச்) சட்ட மூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் அமைச்சர் ரொனி த மெல் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸிலிருந்து பெலரசுக்கு செல்லும் பொது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இலங்கைக்கு கொண்டு வர பேச்சு நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை க்ளப் வசந்தவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் லொக்குபெட்டி எனப்படுபவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டின் இறையாண்மையைப் பறிக்கும் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போகிறார்.

ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. இந்தோ-இலங்கை ஒப்பந்தம், பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுவதை தடுக்க இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களின் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினருடன் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 92 உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவின் கீழிருந்த நீதித்துறை மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அமைச்சர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக புதிய அமைச்சர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் கீழ் அதே பதவி வழங்கப்பட உள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd