web log free
December 12, 2025
kumar

kumar

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே பிரதமர் இல்லாமலேயே அமைச்சரவை பதவியேற்றுள்ளது.அதன் பின்னர் பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து பேசியுள்ளனர்.

இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த பிரதமர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. 

நீண்ட விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை முதல் பலர் பணிக்கு சென்றிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எனினும் இன்று பிற்பகல் முதல் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்போது செய்ய வேண்டியது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதுதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவத்துவல தெரிவிக்கின்றார்.

அதற்கு பதிலாக மீண்டும் அமைச்சரவையை நியமிக்கும் செயற்திட்டத்தை திமிர்பிடித்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களின் ஆணவ ஆட்சி தொடருமானால், லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்சக்களுக்கும் ஏற்படும் என அவர் எச்சரித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

புதிய அமைச்சரவை சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில்  இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 
 
அதன்படி முதல் கட்டத்தில் 17 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. 
 
விபரங்கள் வருமாறு, 
 
1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்.
2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்.
3. ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.
4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.
5. திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்.
6. கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்.
7. விதுர விக்ரமநாயக்க – தொழில் அமைச்சர்.
8. ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்.
9. சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.
10. மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்.
11. விமலவீர திஸாநாயக்க – வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்.
12. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.
13. தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.
14. நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்.
15. சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.
16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்
17. பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு SJB விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது,நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் புது முகங்கள் பலர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் ஜனாதிபதி தலைலமையில் ஜனாதிபதி முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரையில் பேணுவதற்கும் எஞ்சிய வெற்றிடத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நிதி அமைச்சர் தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு தயார் என ரணில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றரை வருடங்களுக்குள் தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி நிறுவனம் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. 

அதன்படி பெற்றோல் ஒரு லீட்டர் மேலும் 35 ரூபாவினாலும் அனைத்து வகை டீசல் ஒரு லீட்டர் மேலும் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (18) 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

A-W வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி நேர இடைவெளியிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற வரம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து இன மொழி மத மக்களும் ஒன்றிணைந்து தமிழ் மொழியில் நாட்டின் தேசிய கீதத்தை சத்தமாக பாடிய சம்பவம் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

தமிழ் மொழியிலான தேசிய கீதம் சிங்கள மொழியில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆங்கிலத்திலும் எழுதி கொடுக்கப்பட்டு தமிழில் இசைக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd