web log free
May 06, 2025
kumar

kumar

கனடாவின் மார்க்காமில் உள்ள ஒரு வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் ஆல்பிரட் தொரியப்பாவின் பேத்தி ரகுதாஸ் நிலாக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த வீடு கனடாவின் மார்க்காமில் உள்ள காசில்மோர் அவென்யூவில் அமைந்துள்ளது, மேலும் யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இளம் பெண், இரண்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீடு இதற்கு முன்பு இரண்டு முறை குறிவைக்கப்பட்டுள்ளது, இந்த முறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு நாயையும் சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நான்கு சந்தேக நபர்களும் நவீன டாக்ஸியில் தப்பிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக கனேடிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை, கனடாவில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பில் தமிழீழ மாவீரர் பணிமனை உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத் தலைவருக்கு, தலைவரின் வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர், தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாடொன்றிலும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக வீர வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

 வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 
 
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இதன்படி, முதலாவது ரயில்  இன்றைய தினம் அடங்களாக 14, 16, 21, 23, 28 மற்றும் 31 திகதிகளில் இரவு 7.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவுள்ளது. 
இரண்டாவது ரயில் குறித்த தினங்களில் மாலை 5.20 இற்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கவுள்ளது. 
 
மூன்றாவது ரயில் நாளை (13) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தினசரி காலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், நான்காவது ரயில் குறித்த தினங்களில் பிற்பகல் 1.50 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையினை முன்னெடுக்கவுள்ளது.

இன்று கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் தலைவர் கோபவக தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கிரிவெஹேரவில் சோரத தேரரால் மஹிந்த ராஜபக்ஷவுக்காக நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் வீடு தொடர்பிலான விசாரணைக்கு விஹாராதிபதி தேரர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ருஹுனு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையின் மிகப்பெரிய வண்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளரும், Asian Paints Group இன் கீழ் அங்கம்வகிக்கின்ற நிறுவனமுமான Asian Paints Causeway, அண்மையில் கொழும்பு BMICH இல் நடைபெற்ற 'Architect 2025' கண்காட்சியில் ஒரு சிறந்த தாக்கத்தைஏற்படுத்தியிருந்தது. Sri Lanka Institute of Architects (SLIA) ஏற்பாடு செய்த Architect 2025 மூன்று நாள் கண்காட்சியானது, கட்டடக் கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில்துறை வல்லுநர்கள், கட்டடக்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட6,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து, மகத்தானவெற்றியைப் பதிவு செய்தது. இக்கண்காட்சியில் Asian Paints Causeway அதன் இரண்டு விரிவான கூடங்களில் தனித்துமாககாட்சியளித்தது. வருகை தந்த பார்வையாளர்களுக்கு தமதுவிரிவான தயாரிப்பு வகைகளை காட்சிப்படுத்தியதோடு, பங்குபற்றலுடனான செயற்பாடுகளையும் நிபுணர்ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்கு அற்புதமானஅனுபவத்தை வழங்கியது.

இந்நிகழ்வு குறித்து Asian Paints International Pvt. Ltd. பிராந்தியத்திற்கான தலைவர் சிரீஷ் ராவ  கருத்துவெளியிடுகையில், “Architect 2025 என்பது உள்ளூர்கட்டுமானத் துறைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். Asian Paints Causeway இக்கண்காட்சியில் பங்குபற்றியதுசந்தையில் எமது தலைமைத்துவத்தை பிரதிபலித்தது. இந்தகண்காட்சித் தளமானது, தொழில்துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் நுகர்வோருடன் நேரடியாகதொடர்புறுவதற்கு எமக்கு உதவியது. இது எமதுவர்த்தகநாமத்தின் தாக்கத்தை அவர்கள் மத்தியில் மேலும்வலுப்படுத்தியது. எமது அர்ப்பணிப்புள்ள குழு மற்றும் எமதுமாறுபட்ட கூடத்தின் அனுபவம் ஆகியன Asian Paints Causeway வர்த்தகநாமத்தை இக்கண்காட்சியில்தனித்துவமாக அடையாளப்படுத்த உதவியது." என்றார்..

Asian Paints Causeway இன் நீர்புகாத அம்சம் கொண்டதயாரிப்புகள் பார்வையாளர்களை ஈர்த்ததோடு, எமதுஆலோசனை நிபுணர்களுக்கும் பார்வையாளர்களுக்கும்இடையே நீண்ட மற்றும் நுண்ணறிவுமிக்ககந்துரையாடல்களுக்கு வழிவகுத்தது. SLIA இனால்அங்கீகரிக்கப்பட்டு SLS மற்றும் Green certification (பசுமைசான்றிதழ்) மூலம் அங்கீகாரம் பெற்ற இத்தயாரிப்புகள், அவைகொண்டுள்ள நிரூபிக்கப்பட்ட செயற்றிறன் மற்றும்தொழில்துறை அங்கீகாரம் ஆகியன நுகர்வோரின்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.

இக்கண்காட்சியில் அதிக கூட்ட நெரிசல் கொண்ட ஒருபகுதியாக Asian Paints Causeway இன் மரத் தோற்ற பூச்சுகள்(wood finishes) அமைந்திருந்தது. இத்தயாரிப்பு வகைகளின்உயர்ந்த ஆயுள், அழகியலின் ஈர்ப்பு மற்றும் பயன்பாட்டுசெயன்முறையை ஆராய்வதில் பார்வையாளர்கள் ஆர்வமாகஇருந்தனர். இதேவேளை, நவீன வீட்டு உரிமையாளர்கள்மற்றும் நிபுணர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பானவண்ணப்பூச்சு சேவையான Safe Painting, அதன் மேலதிகமதிப்பு சேர்க்கப்பட்ட அம்சங்கள் மற்றும் தொந்தரவு அற்றதீர்வுகள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றதால், மிகுந்த ஆர்வத்தை அவை ஏற்படுத்தியிருந்தன.

Asian Paints Causeway இன் நேர்த்தியான உள்ளகவடிவமைப்புகளுக்கான நிறப்பூச்சுகளை வெளிப்படுத்தும்Royale Play ஆனது, கண்காட்சிக் கூடத்தில் ஒருகவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்தனித்துவமான அமைப்புகளையும் தோற்றங்களையும்நேரடியாகத் தொட்டு உணரவும், அது தொடர்பானஅனுபத்தை பெறுவதிலும் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். வண்ண மாதிரிகளைக் கொண்ட காட்சிப்படுத்தல்கள்அர்த்தமுள்ள எடுத்துக்காட்டாக இருந்தன. கட்டடக்கலைஞர்கள், மாணவ கட்டடக் கலைஞர்கள் மற்றும்நுகர்வோர், உள்ளக மற்றும் வெளியக சுவர்களுக்கு ஏற்றவண்ணங்களின் சேர்க்கைகளை ஆராய்ந்து தெரிவு செய்யவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

Architect 2025 கண்காட்சியில் நிறுவனத்தின் பங்கேற்பானது, தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து அதிகளவான பயிற்சிகோரிக்கைகளையும், அதன் தயாரிப்புகளுக்கான அதிககேள்வியையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின்கட்டுமானம் மற்றும் வடிவமைப்பாளர்கள் சமூகத்திற்குள்உறவுகளை வலுப்படுத்தவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குமான ஒருஅற்புதமான தளமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது.

சந்தையில் முன்னணியில் உள்ள தலைவன் எனும் வகையில், இலங்கையின் கட்டுமானத் துறையில் புத்தாக்கம் மற்றும்விசேடத்துவத்தை மேம்படுத்துவதில் Asian Paints Causeway அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது. நீடித்து உழைக்கும்தன்மை, அழகியல் மற்றும் செயற்பாட்டு ரீதியானமுக்கியத்துவம் ஆகியவற்றை மீள்வரையறை செய்து, உயர்ந்தசெயல்திறன் மிக்க தீர்வுகளை நிறுவனம் தொடர்ச்சியாகவழங்கி வருகிறது.

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விஹாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் கட்டப்பட்டு வரும் வீடு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இது நடந்தது.

குறித்த வீடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக கட்டப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற உண்மைகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனை விதிக்காததற்கான காரணங்களைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி வழக்கறிஞருக்கு நீதிபதிகள் குழு அறிவித்தது.

பெயின்ட்ஸ் குழுமத்தின் ஒரு பங்குதாரருமான ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு சமீபத்தில் நிறைவுற்ற இலங்கை கட்டிடக்கலை விருதுகள் 2025 இல் உயர் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது. உள்ளுர் அல்லது இறக்குமதிப் பொருட்களை பயன்படுத்தும் உள்ளுரில் உற்பத்திசெய்யப்பட்ட உற்பத்திகளை அங்கீகரிக்கும் வருடாந்த உற்பத்தி விருதுகள் 2025 வெற்றியாளராக கம்பெனி தோற்றம்பெற்றுள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் ஈரப்பதன் மற்றும் கடுமையான காலநிலைகளிலிருந்து வெளிப்புறச் சுவர்களை பாதுகாக்கும் புரட்சிகரமான முன்னணி நீர்ப்புகா பாதுகாப்பு பெயின்டான ஸ்மார்ட்கெயார் அக்யூவா சேப், மதிப்புமிக்க 'எக்ஸலன்ஸ் விருதினை" எனும் விருதினால் கௌரவிக்கப்பட்டதுடன், ஒப்பற்ற வெடிப்புக்களை பிணைக்கும் இயலுமையும் மற்றும் சுவர்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதுமான ஸ்மார்ட்கெயார் டம்ப் சீல் 'மெரிட்" எனும் விருதினை வென்றது.

இச்சாதனைகள் குறித்து கருத்துதெரிவித்த, ஏசியன் பெயின்ட்ஸ் இன்டர்நேஷல் தனி. நிறுவனத்தின் பிராந்திய தலைவர், சிரேஷ் ராவ் அவர்கள், 'ளுடுஐயு விருதுகள் என்பது நாட்டின் அனைத்து பட்டய கட்டிடக்கலைஞர்களினதும் பிரதிநிதிகளினால் ஒழுங்கமைக்கப்படுகின்ற, கட்டிடக்கலைத் துறையின் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆகும். இலங்கை பெயிண்ட் சந்தையில் தலைமை வகிப்பதும், உள்ளுர் அறிவுடன் சர்வதேச   R&D மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவத்தினை இணைப்பதில் நன்கறியப்பட்டவர்களுமான, நாம், கட்டுமானத்துறையில்எப்பொழுதும் முன்னணி வகிக்கின்றோம். இப்பெருமதிப்புமிக்க மேடையில் எம்முடைய இரண்டு புத்தாக்க உற்பத்திகள் அங்கீகரிக்கப்பட்டமையானது சிறந்து விளங்குவதற்கான எம்முடைய அர்ப்பணிப்பிற்கொரு சான்றாகும்.' என்றார்.

இலங்கை கட்டிடக்கலை விருதுகள் என்பது பல்வேறு வகைகளின் ஊடே கைத்தொழிற்றுறை மைற்கற்களை கட்டமைக்கின்ற அதனது கடுமையான மதிப்பீட்டு செயன்முறைக்காக நன்கறியப்பட்டதாகும். வருடாந்த உற்பத்தி விருதுகளின் வெற்றியாளர்கள் நிபுணத்துவம்வாய்ந்த நடுவர்களது கடுமையான வகைத்தேர்வுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுகின்றனர். உற்பத்திகளானவை தொழிநுட்ப தரவுகள், புதுமை, கட்டிடக்கலை பெறுமதிகள்,நிலைபேண்தன்மை, பெறுமதி சேர்வை, மற்றும் செயற்பாட்டு அளவீடுகள்  போன்ற காரணிகளினால் மதிப்பிடப்படுகின்றன. மேலதிக கருத்திற்கொள்ளும் விடயங்கள் கிடைப்பனவு,விலை, விற்பனைக்குப் பின்னரான சேவை, கடந்தகால செயற்றிட்ட பிரயோகங்கள் மற்றும் உத்தரவாத தரநிர்ணயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் ஸ்மார்ட்கெயார் அக்யூவா சேப், மதிப்புமிக்க 'எக்ஸலன்ஸ் விருதினை" அனைத்து மதிப்பீட்டு அளவீடுகளிலும் சிறந்து விளங்கியமையினால் அடைந்துள்ளது. ஈரப்பதன் மற்றும் கடுமையான காலநிலைகளுக்கு எதிரான உச்சகட்ட பாதுகாப்பிற்கு மேலதிகமாக, பிரிமியம் பெயின்டானது தூசிகள், பாசிகள்,மற்றும் பங்கசுகளுக்கு எதிரான போராட்டக்குணத்திற்கும் அதைப்போன்று அதனது நீடித்த வெளிச்சத்தன்மை மற்றும் வெள்ளைநிறத்திற்காகவும் பரந்த அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது. 'மெரிட்' எனும் விருதுவென்ற ஸ்மார்ட்கெயார் டம்ப் சீல் அதனது அதியுச்ச வெடிப்பு பிணைப்பு இயலுமை,நெகிழ்வுத்தன்மையில் சிறந்த தரம் மற்றும் அதிசிறப்பான நீர்உட்புகவிடா தன்மைகள் என்பவற்றினால் தனித்துவமாக நிற்கின்றது.

சந்தைத் தலைவராக, ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது இலங்கையின் கட்டுமானத்துறையில் புத்தாக்கத்தினை தொடர்ந்தும் வழிநடாத்துவதுடன்நிலைத்தன்மை மற்றும் அழகியலை மறுவரைவிலக்கணப்படுத்தும் உயர் செயற்பாட்டு நிறப்பூச்சினை வழங்குகின்றது. கம்பெனியானது இலங்கையின் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் காலநிலைச் சவால்களுக்கென பிரத்தியேகமான உலகத்தர தீர்வுகளை வழங்குவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

SDB வங்கியானது அதன் பெருநிறுவன முகாமைத்துவஅணியின் Deputy General Manager/Chief Business Officerஆக திரு. சிட்ரல் டி சில்வா அவர்களின் நியமனத்தினைஅறிவிப்பதில் பெருமிதமடைகின்றது. வங்கியியல் துறையில்நான்கு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட தனித்துவமான தொழில்அனுபவத்துடன், திரு. டி சில்வா அவர்கள் நிலைமாறுவளர்ச்சியினை முன்னெடுப்பதில் அனுபவ செல்வத்தினையும்நிருபிக்கப்பட்ட சாதனைகளையும் ஒருங்கே கொணர்கின்றார்.

திரு. டி சில்வா அவர்களது புகழ்மிக்க தொழிற்பயணமானதுஅவர் வங்கியியல் செயற்பாடுகளில் தன்னுடைய திறன்களைதீட்டிக்கொண்ட, டொய்சு வங்கியிலிருந்து ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் நிறுவனத்தின் வெற்றிக்காக அதிமுக்கியபங்குவகித்த, செலான் வங்கியில் சிரேஷ்ட தலைமைத்துவபாகத்தினை வகித்தார். கிளை வங்கியியல் செயற்பாடுகள், அபிவிருத்தி வங்கியியல், மீளப்பெறல்கள், பணவலுப்பல்மற்றும் மூலோபாய வியாபார பெறுபேறுகளை விநியோகித்தல்என்பன அவரது நிபுணத்துவமிக்கப் பகுதிகளைஉள்ளடக்குகின்றன. மரபார்ந்த வங்கியியலிற்கு அப்பால், திரு. டி சில்வா அவர்கள் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும்வாடிக்கையாளர் மைய தீர்வுகளில் கவனம்செலுத்தும், சிலிக்கன் வெளியை மையமாகக் கொண்ட தகவல் தொழிநுட்பகம்பெனியான இமோஜிட் உடன் வியாபார அபிவிருத்திக்கானஅவரது ஆலோசனை வழங்கலின் ஊடாக தன்னுடையதகவமைத்துக்கொள்ளல் மற்றும் புத்தாக்க சிந்தனையையும்வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது தொழிற்பயணத்தின் முழுமையிலும், திரு. டி சில்வாஅவர்கள் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தல், இலாபத்தினை வளப்படுத்தல், மற்றும் மூலோபாயபுத்தாக்கங்களை துணிவுடன் முன்னெடுத்தல் என்பவற்றைஉள்ளடக்கி தொடர்ச்சியாக அதிசிறப்பான பெறுபேறுகளினைவெளிப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளைஅமுல்படுத்தல், செயற்பாட்டு வினைத்திறனை முறைப்படுத்தல், மற்றும் பலமான வாடிக்கையாளர் ஈடுபாட்டினைவளர்த்தல்களிலான அவரது அனுபவமானது SDB வங்கிக்கானஒரு பெறுமதிமிக்க சொத்தாக அவரை நிலைப்படுத்துகின்றது.

SDB வங்கியானது புத்தாக்க நிதிசார் தீர்வுகளின் ஊடாகசமுதாயங்களை வலுப்படுத்தும் தனது நோக்கத்தினில்தொடர்ந்தும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. பெருநிறுவன முகாமைத்துவ அணியிலான திரு. டி சில்வாஅவர்களது இணைவானது அதனது தலைமைத்துவத்தினைவலுப்படுத்துவதிலும் அதனது பங்குதாரர்களிற்கு இணையற்றபெறுதியினை வழங்குவதிலுமான வங்கியின் அர்ப்பணிப்பினைவெளிப்படுத்துகின்றது.

SDB வங்கி குறித்து:

வாடிக்கையாளர் மைய மற்றும் பொருத்தமான ஆதரவினைவழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒவ்வொருதனிநபரினதும் தேவைகளுக்காகபிரத்தியேகமாக்கப்பட்டதுமான, எதிர்காலத்திற்கு தயாரனாவங்கியொன்றாக, SDB வங்கியானது இலங்கை மத்தியவங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அனுமதிப்பெற்றவிசேடத்துவப்பட்ட வங்கியொன்றாவதுடன் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான சபை மற்றும் பிட்ச் ரேட்டிங் BB+ (lka) உடன் பட்டியலிடப்பட்டதாகவும் காணப்படுகின்றது. நாடளாவியரீதியிலான 94 கிளைகளின் வலையமைப்புடன், நாடு முழுவதுமான அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சியாளர்கள், பெருநிறுவனங்கள், மற்றும்வியாபார வங்கியியல் வாடிக்கையாளர்களிற்கு நிதிசால்சேவைகளின் பொருத்தமான அளவுகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகள் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள்மற்றும் வியாபாரத்தினை முன்னேற்றுவதில் நிலையானகவனத்தினைச் செலுத்துவதுடன், சுற்றுச்சூழல், சமூக மற்றும்ஆட்சி கோட்பாடுகள் என்பன வங்கியின் விழுமியங்களில்ஆழமாக உள்வாங்கப்பட்டுள்ளன. வங்கியானது இலங்கையைபுதிய உச்சங்களை நோக்கி இட்டுச்செல்வதினைநோக்கமாகக்கொண்டு, பெண்களை வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களது நிலைபேறானஅபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பு என்பனவற்றைமுன்னிலைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புமிக்கதாககாணப்படுகின்றது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd