ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களையே மஹிந்த இவ்வாறு எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த கட்சி தலைவர்களுக்கு பிரதமர் கடுமையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளர்.
நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்பு என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம். ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்ற போதிலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்