web log free
May 05, 2026

உலக நாடுகளில் முதலிடம் பிடித்த இலங்கை

தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் Our World in Data இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேருக்கு கடந்த வாரம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என World in Data-வின் தலைவர் தனது டுவிட்டர்  மூலம் சுட்டிக்காட்டினார். இதன்படி,

ஈக்வடார் 12.5 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும்

புருனே 11.7 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும்

நியூசிலாந்து 11.6 சதவிகிதத்துடன் நான்காவது இடத்திலும்

கியூபா 11.2 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd