web log free
May 17, 2024

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் இராணுவ பயன்பாட்டு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்மையில் பெய்த மழை காரணமாக புதைந்திருந்த குறித்த பொருட்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த பொருட்கள் இராணுவ உபயோக பொருட்கள் எனவும், அதில் 7 கண்ணிவெடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் அகற்றப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

அநுராதபுர சிறைசாலையில் இருக்கும் 11 தமிழ் கைதிகள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் உடனடி சந்திப்பு குறித்து விவாதிக்க கடிதம் அனுப்பிய பின்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.