web log free
May 21, 2024

2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு இப்போது சில "தொழில்நுட்ப சிக்கல்களை" மேற்கோள் காட்டி, கூறப்பட்ட முடிவை செயல்படுத்துவதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது.

சில “தொழில்நுட்ப சிக்கல்கள்” காரணமாக பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டைகளை மக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதை தாமதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

"சில தொழில்நுட்ப சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக மொபைல் பயன்பாட்டின் உருவாக்கம் மற்றும் QR (quick response - விரைவான பதில்) குறியீடு போன்றவை. எனவே இதை இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவு செய்தோம். இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவை அமல்படுத்த முடியும்,'' என்றார்.

18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டம் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 24,000 பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணபதி வித்தியாலயம்,வுல்பெண்டேல் பெண்கள் பாடசாலை,விவேகானந்தா கல்லூரி,அல் ஹக்கீம் கல்லூரி,மத்திய கொழும்பு இந்து கல்லூரிச் சேர்ந்த மாணவர்கள் விவேகானந்தா கல்லுாரியில் தமக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, கொழும்பிலுள்ள விசாகா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளில் தடுப்பூசிகள் அந்த பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மேலும், ஹோமாகம வலயத்தில் உள்ள 6 பாடசாலைகள், பிலியந்தல வலயத்தில் உள்ள 7 பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வலயத்தில் உள்ள 4 பாடசாலைகளிலும் முதலாவது டோஸ் தடுப்பூசி போடும் லேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசிகளுள் ஒன்றான மொடோனா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் தலைவர் சந்திம ஜுவந்தர தெரிவித்துள்ளார்.

மொடோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டாவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு தற்பொழுது ஆய்வுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்புட்னிக்V தொடர்பான ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் அண்மையில் சைனபார்ம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கம் தடுப்பூசிகள் மரணத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது, மேலும் கொடிய இரண்டாவது கொரோனா அலை காரணமாக இறந்தவர்களில் பலருக்கு எந்த அளவு தடுப்பூசி டோஸ்ம் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.

தரவுகளை வெளிப்படுத்திய இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தலைவர் வி.கே.பால், இந்த தடுப்பூசி வைரஸுக்கு எதிரான மிக முக்கியமான கவசம் என்று கூறினார்.

ஒரு முழு தடுப்பூசி அளவைப் பெற்றிருநதால், அது இறப்பு விகிதத்தை ஏற்படுத்தாது, அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மிகக் குறைந்த அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அரசாங்க அறிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Page 1 of 2