நாட்டைக் கட்டியெழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்பில் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் கைகோர்த்தார்.
மூன்று தசாப்த கால கொடிய எல்.ரீ.ரி.ஈ பயங்கரவாத யுத்தத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான பணியை வழிநடத்திய ஒரு தளபதி போலவே இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதியுமான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரபாத் மாதரகேவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
தற்போது மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பணிப்பாளராக பிரபாத் மாதரகே கடமையாற்றி வருகின்றார்.
ஏசியன் மிரர் இணையத்தளத்தில் செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மீடியா செயற்பாடுகள் மற்றும் இணைய ஆசிரியராக பணியாற்றிய அவர் ஜனாதிபதி அலுவலகம் உட்பட பல தனியார் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் பதவிகளை வகித்து அனுபவம் வாய்ந்த மற்றும் முதிர்ந்த ஊடக நிர்வாகியாவார்.
பிரபாத் மாதரகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்து கணனி விஞ்ஞானம் மற்றும் இலத்திரனியல் ஊடக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்றுள்ளார்.
இவர் ஹோமாகம மகா வித்தியாலயம், ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஹொரணை றோயல் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் முன்னணி நிறுவனமான சந்தனாலேப, அதன் ஆயுர்வேத குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதன் மூலம், தனது 30 ஆண்டுகால பயணத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை கொண்டாடுகின்றது.
சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் வெளியீடுட்டு விழா, வியாங்கொடையில் உள்ள நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.
நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இவ்வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை, Sanjeewaka Ayurvedic Products Pvt Ltd தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமதிலக இங்கு எடுத்துக் கூறினார்.
அவர் தெரிவிக்கையில், "நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு பாத்திரமாக சந்தனாலேப விளங்குகின்றது. எமது புதிய குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம், ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளை அரவணைப்பதில் பெருமிதம் கொள்ளும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, அந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் காலத்தால் அழியாத ஆயுர்வேத ஞானத்தால் ஈர்க்கப்பட்ட எமது நிபுணத்துவத்துவம் மூலம், குழந்தை பராமரிப்பின் தரநிலைகளை மீள்வரையறை செய்யும் தெளிவான தூர நோக்குடன், இந்த புதிய தயாரிப்பு வகைகளில் சந்தனாலேப நுழைகிறது. சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், எதிர்வரும் நாட்களில் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்றார்.
சந்தனாலேப குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளில் பேபி சோப், பேபி க்ரீம், பேபி கொலோன் ஆகியன உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் நம்பகமான ஆயுர்வேத மூலப்பொருட்களின் சாரத்துடன் உரிய கலவையுடன், குழந்தைகளுக்கு உகந்த ஆறுதலையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. பேபி சோப் வகைகளில் மில்க் அன்ட் ஹனி பேபி சோப், கொஹொம்ப அன்ட் வெனிவெல் சோப், ரத்மல் அன்ட் பொக்குருவாட பேபி சோப் போன்ற வகைகள் காணப்படுகின்ன. சந்தனாலேப பேபி க்ரீம் ஆனது, பால் மற்றும் தேனின் நலன்களை கொண்டுள்ளது. அத்துடன் அதன் கொலோன்கள், சந்தன மரத்தின் நம்பகமான நறுமணம் உட்செலுத்தப்பட்டதாக காணப்படுகின்றன.
ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் சந்தையில் ஒரு முன்னோடியாகவும், 100% இலங்கை வர்த்தக நாமம் எனும் பெருமையுடனும் உள்ள சந்தனாலேப, பெற்றோர்-குழந்தை பந்தத்தின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தை பராமரிப்பு உற்பத்தி வகைகளில் காணப்படும் அதன் ஒவ்வொரு தயாரிப்பும் இந்த உறவை மேம்படுத்தவும், மென்மையான தருணங்களை உருவாக்கவும், குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்யவுமாக மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனாலேப தனது குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை, பரபேன் மற்றும் சல்பேட் அற்றவையாக பேணுவதோடு, உலகளாவிய IFRA நறுமண தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. அதன் அனைத்து உற்பத்திச் செயன்முறைகளும், ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22716, Cosmetic GMP சான்றிதழ் உள்ளிட்ட மிக உயர்ந்த தரங்களை பேணுகின்றன.
1948 ஆம் ஆண்டு, வியாங்கொடையில் உள்ள பிரபல ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் ஆர்.டி.பி. ஜயரத்ன இந்த வர்த்தக நாமத்திற்கு அடித்தளமிட்டதைத் தொடர்ந்து, சந்தனாலேபவின் பாரம்பரியம் ஆரம்பமானது. அந்த வகையில் இன்று, இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் முன்னோடியாக விளங்கும் சந்தனாலேப, சிறந்த அழகுசாதன வர்த்தகநாமமாகவும், நாட்டின் மிகப்பெரிய ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளராகவும் பரிணமித்துள்ளது. பாரம்பரிய ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை இணைத்து, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறையில் சந்தையில் ஒப்பிட முடியாத தலைவராக சந்தனாலேப விளங்குகின்றது.
தரம் மற்றும் சிறப்பிற்காக அது கொண்டுள்ள அர்ப்பணிப்பு மூலம், சந்தனாலேப தயாரிப்புகள் நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் பாரம்பரிய ஞானத்தை உள்ளடக்கியது. பேபி க்ரீம் மற்றும் பேபி கொலோன் வழங்கும் இனிமையான அரவணைப்பு முதல் குழந்தை சோப்புகளில் காணப்படும் தூய்மைப்படுத்தும் மென்மையான தொடுகை வரை, ஒவ்வொரு தயாரிப்பும் பெற்றோருக்கான உங்கள் பயணத்தில் நம்பகமான பங்காளியாக இருக்கும் எனும் வாக்குறுதியை அது பிரதிபலிக்கிறது.
மாவனல்லை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடைகளில் நேற்றிரவு (28) தீ பரவியுள்ளது.
அதன்படி சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கான இழுபறி நிலையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அந்த பதவிக்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், முன்னாள் பிரதி அமைச்சர் திலங்க சுமதிபாலவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோடு நீதிமன்றில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலைமையால், இருவரிடமும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் குழுவில் உள்ள எவருக்கும் அந்த பதவி வழங்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அரசு நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் சிறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இன்று (29) சுகயீன விடுமுறையை அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளை பாதிக்கும் சம்பள முரண்பாடு மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதால் ஏற்படும் அநீதி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் இன்று (29) எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும் சர்வதேச கிரிக்கட் பேரவை இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் சுமார் 150,000 பேர் கொண்ட அரச ஊழியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளின் சொத்துப் பிரகடனங்களைப் பெற இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
எனவே, புதிய இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுச் சட்டத்தின் மூலம், முப்பத்தொரு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவில் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு துறைமுக ஜெட்டியின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஜெட்டி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், துறைமுகத்திலேயே சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அது தொடர்பாக சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார் துறை மூலம் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
குறிப்பாக, துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகள் என சகல செலவுகளையும் தவிர்த்து 23 பில்லியன் ரூபா அல்லது 2300 கோடி நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் துறையினூடாக தொழில் உருவாக்கம் அடையும் போது பணியாளர்கள் அதிகளவு பயனடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.