web log free
May 07, 2025
kumar

kumar

CEYPETCO எரிபொருள் நிறுவனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிகளை அகற்றும் தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Veet, இலங்கைச் சந்தையில் 'New Veet Pure' ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது.

இந்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பானது, புரட்சிகரமான அம்சங்களை கொண்டு வருகின்றது. மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வானது இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் பெண் ஆளுமைகள் கலந்துகொண்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

இந்நிகழ்வில் உமாரியா சின்ஹவன்ச போன்ற புகழ்பெற்ற பாடகியும் அடங்குகின்றார். அவருடன் இலங்கை பேஷன் மற்றும் மொடலிங் துறையில் ஒரு சின்னமான ரொஷேன் டயஸ், பிரபல அழகுக்கலை நிபுணரும் தொழில்முனைவோருமான ஹாசினி குணசேகர உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

முடி அகற்றுவதில் #NextBigThing என நிலைநிறுத்தும் வகையில், 'New Veet Pure' பல புத்தாக்கமான அம்சங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. அதன் ஒரு தனித்துவமான பண்பான நீண்ட நேர புதிய நறுமணமானது, முடி அகற்றுதல் அனுபவத்தை ஒரு அற்புதமான வழியாக மாற்றுகிறது.

இத்தயாரிப்பானது, உலர் சருமம் (திராட்சை விதை எண்ணெயின் சாரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது), சாதாரண சருமம் (வெள்ளரிக்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது), உணர்திறன் வாய்ந்த சருமம் (கற்றாளைச் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது) என வெவ்வேறு சரும வகைகளுக்கு ஏற்றவாறு 3 வகைகளில் கிடைக்கிறது. 

புதிய சிறப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ள New Veet Pure ஆனது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சவரம் போன்ற குறைவான பாதுகாப்பான முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக, வசதியான, செயற்றிறன் மிக்க, பாதுகாப்பான அம்சங்களின் சாராம்சமாக அமைகின்றது.

Salon waxing போன்ற விலையுயர்ந்த மாற்று நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், New Veet Pure ஆனது விரைவான, தொந்தரவற்ற தீர்வாகத் திகழ்கிறது. இது சிக்கனமானது எநீங்கள் எதிர்பார்க்கும் சிறந்த முடிவை வழங்குகிறது. New Veet Pure இன் அனைத்து வகைகளும், விரிவான, கடுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்பு மற்றும் செயற்றிறனை உறுதி செய்கிறது.

New Veet Pure வெளியீடானது, வழக்கமான தயாரிப்பு வெளியீட்டு முறைகளிலிருந்து மாறுபட்டதாக, முக்கிய விருந்தினர்களான உமாரியா, ரொஷேன் மற்றும் ஹாசினி குணசேகர ஆகியோரைக் கொண்ட குழுவான கலந்துரையாடலை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

நவீன இலங்கைப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதில் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையமாக இக்கலந்துரையாடல் அமைந்தது. இந்நிகழ்வானது, Veet இன் பிரபல தன்மையின் முக்கிய அம்சத்தை கோடிட்டுக் காட்டியது. குறிப்பாக வெறுமனே முடியை அகற்றும் ஒரு பொருளாக இருப்பதன் அர்ப்பணிப்பைக் கடந்து, நவீன பெண்ணை அவளது பயணத்தின் துணையாக மேம்படுத்துவதற்கான ஒரு அம்சமாக விளங்குகின்றது, என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Reckitt Benckiser Lanka Ltd சுகாதாரப் பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சத்துரிகா பொன்சேகா இது தொடர்பில் தெரிவிக்கையில், "முடி அகற்றும் தயாரிப்புகளில் உலகளாவிய ரீதியில் Veet முன்னணியில் உள்ளது. மேலும் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள், இவ்வர்த்தகநாமத்தின் வெற்றியின் மூலக்கல்லாகும்.

புதிய Veet Pure ஆனது, விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) முயற்சிகளின் விளைவான ஒன்றாகும் என்பதோடு, இது முடி அகற்றுவதில் #NextBigThing எனும் அதன் அடிநாதத்திற்கு ஏற்றவாறு திகழ்ந்து, அனைவரிடையேயும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள சந்தைகளில், பயனுள்ள மற்றும் சிக்கனமான சுய சீர்ப்படுத்தும் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வரும் இவ்வேளையில், இப்புதிய தயாரிப்பு உள்ளூர் சந்தைக்கு வருகிறது. அத்துடன், Veet Pure ஆனது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெறும் என நாம் எதிர்பார்க்கிறோம்," என்றார்.

Reckitt Benckiser Lanka Ltd சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் அஞ்சலிகா மஹிந்தபால தெரிவிக்கையில், "முடி அகற்றும் விடயத்தில், Veet எப்போதும் பயனுள்ள, பாதுகாப்பான, பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரிவாக தனித்து நிற்கிறது. New Veet Pure அதை மேலும் உயர்ந்த நிலைக்குசெல்லும். அதன் மேம்படுத்தப்பட்ட கலவையானது, புதிய வாசனை மற்றும் இயற்கை மூலப்பொருட்களுக்கு மேலதிகமாக, நீண்ட நேர மிருதுவான தன்மையை வழங்குவதோடு, ஈரப்பதன் மற்றும் பாதுகாப்பு அடுக்கு பண்புகளையும் அது கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் யாவும் முடி அகற்றுதல் அனுபவத்தை பயனுள்ளதாக மட்டுமல்லாது, சுவாரஷ்யமாகவும், எதிர்பார்ப்பு மிக்க ஒரு சடங்காகவும் மாற்றியமைக்கின்றது," என்றார்.

அழகு நெறிமுறைகளுக்கு அப்பால் பெண்களை மேம்படுத்தும் நோக்குடனும், Reckitt Benckiser இன் விரிவான விற்பனை வலையமைப்பின் ஆதரவுடனும், Veet இலங்கைப் பெண்களுக்கு அதன் 3 வகை தயாரிப்புகளையும் நாடு முழுவதும் கிடைக்கச் செய்கின்றது. அனைத்து வகைகளும் 30 மற்றும் 50 கிராம் பொதிகளில் வருவதோடு, New Veet Pure ஆனது பட்ஜெட்டுக்கு ஏற்றதுடன், அனைத்து பெண்களும் எளிதாக அணுகக்கூடியதாகும்.

Reckitt Benckiser பற்றி:

மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மேம்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட FMCG தயாரிப்புகளில் புகழ்பெற்ற, உலகளாவிய முன்னணி நிறுவனமாக Reckitt Benckiser திகழ்கின்றது. சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகிய பிரிவுகளில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற Reckitt Benckiser நிறுவனம், Harpic, Dettol, Durex, Mortein, Lysol, Air Wick, Strepsils உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த பல்வேறு வர்த்தகநாமங்களின் தாய் வீடாக விளங்குகின்றது.

1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தான் தியானம் செய்ததாக வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதனால் தனக்கு ஞாபக சக்தி அதிகம் என்று கூறினார்.

கணனி, கால்குலேட்டர் அல்லது குறிப்புகள் எதுவுமின்றி தான் கூட்டங்களுக்குச் சென்று எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளை வழங்குவதாகவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எந்த அமைச்சு குறித்தும் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்று கூறினார். 

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கொழும்பு  போராட்டத்தில் சில பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் காயம் ஏற்பட்டதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா உறுதிப்படுத்தினார்.

அதேவேளை சமகி ஜன பலவேகய (SJB) கட்சியினரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"சம்பவத்தில் சில பொலிசார் காயமடைந்தனர், ஆனால் நான் இன்னும் அறிக்கையைப் பெறுகிறேன்," என்று தல்துவ கூறினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட ஐந்து கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எனினும் எந்தவொரு அரசியல்வாதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலரை சஜித் நேரில் சென்று பார்வையிட்டார். 

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பராசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பராசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பராசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் சிறிலங்கா விமானப்படையின் இரண்டு பராட்ரூப் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பராட்ரூப் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் சந்தேகநபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் அரச வருமானத்தை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மறைமுக வரிகளை அறிமுகப்படுத்துவதற்கோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிப்பதற்கோ எந்த நம்பிக்கையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி என்பது குறிப்பிட்ட தொகை என்றும் அமைச்சர் கூறினார்.

76வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை தினங்களில் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், வீதிகளை மூடுதல் மற்றும் மாற்று வழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை மையமாக வைத்து இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயிற்சிக்கு முந்தைய நாட்களில் (ஜன. 30 - பெப். 3) காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், சுதந்திர தின விழாவிற்கு பெப்ரவரி 3ம் திகதி மதியம் 2:00 மணி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை நிகழ்ச்சி முடியும் வரை மாற்று போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும். 

மக்கள் வங்கி, ஏற்றுமதிகளுக்கான சர்வதேச சந்தைகளைக் கைப்பற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு உதவ '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்த்துள்ளது. 

ஒரு முன்னணி அரச வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை தெளிவாக இனங்கண்டுள்ளது.

அதற்கமைவாக, சர்வதேச சந்தைகளில் எழுகின்ற வாய்ப்புக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நிதியியல் சார்ந்த மற்றும் நிதியியல் சாராத உதவிகளை வழங்குவதற்காக ஏற்றுமதித்துறை குறித்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக மையங்களை (ஏற்றுமதி மையங்கள்) ஸ்தாபித்து, புதுமையான கோட்பாடொன்றை வங்கி 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்த முயற்சியின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் துறைக்கு ஏற்றுமதிக்கு முன்னரான நிதி வசதிகள், ஏற்றுமதிக்குப் பின்னரான நிதி வசதிகள், ஆலோசனை சேவைகள், விசேட இணைய வங்கிச்சேவைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் ஏற்கனவே ஐந்து ஏற்றுமதி மையங்களை வங்கி ஸ்தாபித்துள்ளது.   

ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற வங்கியின் இலக்கினை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய அணியொன்று பாஹ்ரென் தேசிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திச் சபையின் மூலோபாய முன்னெடுப்பான ‘EXPORT BAHRAIN’ சந்தித்திருந்தது.

பாஹ்ரெனில் உள்ள வணிகங்கள் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் வணிக வாய்ப்புக்களை அணுகுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுகின்ற தனித்துவமான தீர்வுகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றை வழங்குவதனூடாக பாஹ்ரெனை தளமாகக் கொண்ட வணிகங்களின் ஏற்றுமதி வாய்ப்புக்களை மேம்படுத்தி, உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பே ‘EXPORT BAHRAIN’ ஆகும்.  

'‘EXPORT BAHRAIN’' பிரதம நிறைவேற்று அதிகாரி சாஃபா ஷரீஃப் ஏ. காலிக் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்கள் பிரிவின் ஸைனாப் மட்ரூக் ஆகியோர் 2024 ஜனவரி 8 ஆம் திகதியன்று மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர்  கிளைவ் பொன்சேகா ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாஹ்ரெனிலுள்ள இலங்கைக்கான தூதுவரான எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. விஜேரத்ன மென்டிஸ் அவர்களின் முயற்சியால் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மக்கள் வங்கியின் தொழில்முயற்சி வங்கிச்சேவைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையில் தேயிலை, கறுவா, ஆடையணி, அலங்கார மலர்கள், பதனிடப்பட்ட உணவு, வாசனைத் திரவியங்கள், தேங்காயை மூலமாகக் கொண்ட உற்பத்திகள் அடங்கிய ஏற்றுமதித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களான வாடிக்கையாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பாஹ்ரென் மற்றும் இலங்கை நாடுகளிடையே வாணிப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து, ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு மிகவும் பயன்மிக்க கலந்துரையாடலில் அவர்கள் ஈடுபட்டனர். 

ஏற்றுமதி நிதி வசதி, ஏற்றுமதி கடன் காப்புறுதி, சர்வதேச புள்ளிவிபரங்களுக்கான அணுகல், நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சந்தை நுண்ணறிவு, ஏற்றுமதி அனுசரணைகள், விசேட அறிவுபூர்வமான கருவிகள், மூலோபாய மதிப்பீட்டுக் கருவிகள் போன்ற முக்கிய துறைகளில் குறிப்பிட்ட உதவிகளை வழங்குவதனூடாக சர்வதேச வாய்ப்புக்களுக்கான கதவுகளைத் திறப்பதற்கு நுஒpழசவ டீயாசயin வழங்கும் ஏற்றுமதி இலக்குடனான தீர்வுகளை சாஃபா ஷரீஃப் அவர்கள் வலியுறுத்தியதுடன், இந்த முயற்சிகளினூடாக வெற்றிகரமான ஏற்றுமதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான படிகளை உள்ளடக்கி சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நுண் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு 'நுஒpழசவ டீயாசயin' எவ்வாறு உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.   

சிறிய மற்றும் நடுத்த அளவிலான வணிகங்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைகளுக்கு அமைவாக ‘EXPORT BAHRAIN’ எவ்வாறு தீர்வுகளைத் தோற்றுவிக்கின்றது என்பதையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பொறுத்தவரையில் எப்போதும் மாற்றங்கண்டு வருகின்ற ஏற்றுமதிச் சந்தைப் போக்குகள் மற்றும் ஒழுங்குமுறைகளை காலத்திற்கு அமைவானதாக உள்வாங்குவதற்கு எவ்வாறு இது உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.

தொழில் முயற்சியாளர்கள் பலருக்கும் தமது உற்பத்திகளுக்கு நிலைபேணத்தகு சர்வதேச சந்தையைக் கண்டறிவது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் நிலையில், வங்கியில் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள மற்றும் புதிதாக வாடிக்கையாளர்களாக மாறுகின்ற ஏற்றுமதியாளர்களுக்கு பாஹ்ரென் சந்தையில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை வளர்த்துக் கொள்வதற்கு பெறுமதிமிக்க உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்ப்பதற்கு மக்கள் வங்கி திட்டமிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd